மனித உரிமைகளை பலப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாச ஐரோப்பிய குழுவிடம் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

30 Sep, 2021 | 09:28 AM
image

(ஆர்.யசி)

நாட்டின் மனித உரிமைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தினால் பல்வேறு விதமாக ஜனநாயக அடக்குமுறைகள் கையாளப்பட்டு வருகின்றது. அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அநாவசிய கைதுகள் இடம்பெற்று மக்கள் பிரதிநிதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தெரிவித்துள்ளளார்.

மேலும், நாட்டின் ஜனநாயக செயற்பாடுககள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ள போதிலும் ஐரோப்பிய ஒன்றியம் மூலமாக ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நிராகரிக்கப்படக் கூடாது எனவும், இலங்கைக்கு தொடர்ந்தும் இந்த சலுகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை வந்க்துள்ள  ஐவர் கொண்ட  ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் நேற்றுமுன்தினம் பிற்பகல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக லக்ஸ்மன் கிரியெல்ல, ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பு குறித்து எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல கேசரிக்கு கூறுகையில்,

நாட்டில் மிக மோசமாக ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழ் முஸ்லிம் மக்கள் மீது கடந்த காலங்களில் பாய்ந்த அடக்குமுறை சட்டங்கள் தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மீதும் பாய்ந்துள்ளது. இந்த காரணிகளை அவர்கள் நன்றாக அறிந்துள்ளனர். அதேபோல் சிவல் உரிமைகள் பறிபோகின்றது என்பதும் அவர்களுக்கு தெரிந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இப்போது புதிய கொள்கையொன்று கடைப்பிடிக்கப்படுகின்றதாம், மனித உரிமைகள் பறிக்கப்படும் நாடுகளில், சிவில் சட்டங்கள் மீறப்படுகின்ற நாடுகளில், அடக்குமுறையை கையாண்டு நகரும் நாடுகளிடம் இருந்து பொருள் கொள்வனவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆகவே இலங்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஆராயும் விதமாக அவர்களின் இந்த கண்காணிப்பு விஜயம் அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எமது நாட்டில் உண்மை நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடுத்துக்கூறியுள்ளார், குறிப்பாக அண்மைக்கால அடக்குமுறை செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம். பயங்கரவாத தடை சட்டம் குறித்து நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்ற போதிலும் அரசாங்கம் அதனை மாற்றியமைக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. ஆகவே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு தற்போதுள்ள பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட  வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

எவ்வாறு இருப்பினும் மனித உரிமைகளை பலப்படுத்தவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், சட்ட ஆட்சியை நிலைநாட்டவும் சர்வதேச சமூகம், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பதாக இருந்தாலும் கூட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை எதிர்க்கட்சி தலைவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளள்ளார்.

ஏனென்றால், மனித உரிமைகள், ஜனநாயக அடக்குமுறைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விடயம் என்பதை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகவே பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான தீர்மானங்களை எடுத்தால் அது அரசாங்கத்தை மட்டுமல்ல நாட்டு மக்கள் சகலரையும் பாதிக்கும். மக்களை நெருக்கடிக்குள் தள்ள எதிர்கட்சியாக நாம் விரும்பவில்லை என்பதே எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27