அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களென ஒருபோதும் கூறவில்லை - வீரசேகர

Published By: Digital Desk 3

30 Sep, 2021 | 09:49 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என ஒருபோதும் குறிப்பிடவில்லை.

அடிப்படைவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தினரிடமும், முஸ்லிம் அமைப்புக்களிடமும் விடுத்த கோரிக்கை இவ்வாறு  திரிபுப்படுத்தப்பட்டுள்ளது  என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதியே சந்தேக நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதற்கு இனவாத உருவம் வழங்குவது முற்றிலும் தவறானது.

அடிப்படைவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டவரை இலகுவில் வேறுப்படுத்தி இனங்காண்பது கடினம். இவர்கள் எந்நேரத்திலும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அடிப்படைவாத தாக்குதல் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றில் ஆற்றிய உரை      யை அடிப்படையாகக் கொண்டு ஒரு தரப்பினர் எனக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தவறான சித்தரிப்புக்களை முன்னெடுத்துள்ளார்கள்.

என்னுடன் நன்றாக பழகிய முஸ்லிம் நண்பர்களும் இந்த தவறான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளமை கவலைக்குரியது.

நாட்டில் எந்நேரத்திலும் அடிப்படைவாத தாக்குதல் இடம் பெறலாம். என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயத்திற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் எனத நிலைப்பாட்டை கோரிய போது நான் பாராளுமன்றில் ஆற்றிய உரை திரிபுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08