ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் எரிமலை ; கடலை நோக்கி செல்லும் லாவா குழம்பு

Published By: Digital Desk 3

29 Sep, 2021 | 12:44 PM
image

ஸ்பெயினில் எரிமலை வெடித்துச் சிதறியதில், எரிமலைக் குழும்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.

லா பால்மா தீவில் உள்ள எரிமலை கடந்த 19 ஆம் திகதி வெடித்துச் சிதறியது.

சில நாட்கள் அமைதி காத்த எரிமலை, 9 நாட்களின் பின்னர் நேற்று மீண்டும் லாவா என்னும் எரிமலைக் குழம்பை வெளியிட ஆரம்பித்துள்ளது.

இந்த எரிமலைக் குழம்பு ஆறு போல ஓடி அந்திலாந்திக் கடலை நோக்கிச் செல்ல ஆர்மபித்துள்ளது. ஆனால் கடலை எப்போது சென்றடையும் என கூறமுடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

லாவா ஓடிய பாதையில் இருந்த 600 க்கும் அதிகமான வீடுகள், வாழைத்தோட்டங்கள், வழிப்பாட்டு தலங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இந்நிலையில், முதல்கட்டமாக 10.5 மில்லியன் யுரோவை நிவாரண நிதியாக ஸ்பெயின் அரசு விடுவித்துள்ளது.

நேஷனல் ஜியோகிராஃபிக் இன்ஸ்டிடியூட் எரிமலை வெடித்த பகுதியில் ஆறு பூகம்பங்களைக் கண்டறிந்துள்ளது.

இதுவரை உயிரிழப்புகள் அல்லது பலத்த காயங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது.

பெரும் அளவு சாம்பல் புகை   காரணமாக நான்காவது நாளாக லா பால்மா விமான நிலையத்திற்குள் அல்லது வெளியே எந்த விமானங்களும் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47