2021 ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் கட்டத்தில் மும்பையின் முதல் வெற்றி!

Published By: Vishnu

29 Sep, 2021 | 08:36 AM
image

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் 42 ஆவது ஆட்டம் நேற்றிரவு டுபாயில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை களத்தடுப்பை தேர்வுசெய்ய பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக அடன் மார்க்ரம் 42 (29) ஓட்டங்களையும், தீபக் ஹூடா 28 (26) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

136 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, 19 ஆவது ஓவரின் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ஒட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது.

அணி சார்பில் அதிகபடியாக செளரப் திவாரி 45 (37) ஓட்டங்களையும், ஹர்த்திக் பாண்டியா 40 (30) ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

இந்த வெற்றி 2021 ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் கட்டத்தில் நடப்பு சம்பியனான மும்பை அணி பெறும் முதல் வெற்றியாகும்.

இதேவ‍ேளை நேற்று மாலை சார்ஜாவில் நடைபெற்ற 41 ஆவது லீக் போட்டியில் ரிஷாப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் -இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ஒட்டங்களை பெற்றுது.

128 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

இது இவ்வாறிருக்க இன்றிரவு டுபாயில் ஆரம்பமாகும் 43 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

Photo Credit ; ‍‍IPL

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21