அத்தியாவசியப் பொருட்களுடன் தேங்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை - அரசாங்கம்

Published By: Gayathri

28 Sep, 2021 | 07:00 PM
image

(எம்.மனோசித்ரா)

டொலர் நெருக்கடியின் காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களை விடுவிப்பதற்காக இறக்குமதி நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்தினால் 50 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் ,

உள்நாட்டு சந்தையில் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இது தொடர்பில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது. 

இதன்போது டொலர் நெருக்கடியின் காரணமாக சுமார் 800 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமலுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய குறித்த 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கத்தினால் 50 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய விரைவில் அவற்றை விடுவிப்பதற்கும் துறைமுக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். துறைமுகத்தில் சட்ட ரீதியான மற்றும் சட்ட ரீதியற்ற என்ற இரு வகை கொள்கலன்கள் உள்ளன.

அவற்றில் சட்ட ரீதியாக கொண்டு வரப்பட்டுள்ள கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்காகவே 50 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது. 

அதேவேளை சட்டரீதியான கொள்கலன்களை அரசுடைமையாக்கி அவற்றிலுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55