நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது - ரமேஷ் பத்திரண

Published By: Digital Desk 3

28 Sep, 2021 | 03:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதி அரசாங்கத்திடம் இருக்கிறது. எனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று சந்தேகம் கொள்ளவோ அல்லது வீண் அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் டொலர் நெருக்கடியின் காரணமாக எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்படுமா என்பது தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எதிர்வரும் காலங்களில் சுற்றுலாத்துறையை மீள ஆரம்பித்து அதன் மூலம் அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் என்று நம்புகின்றோம்.

நாட்டை வழமைக்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கப் பெறுகின்ற முதலீடுகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27