மக்களை கருத்திற்கொண்டு சு.க. உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்

Published By: Ponmalar

16 Sep, 2016 | 10:37 PM
image

"வற்" வரி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது மக்களின் பக்கமிருந்து சிந்தித்து வாக்களிக்க வேண்டியது சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கடமை என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளர்  விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் ஒரு முறை நாட்டு மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்தி மக்களை நெருக்கடிக்குள்ள தள்ள முற்படுகின்றது. அதனால் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் குறிப்பிடதக்க வகையிலான மாற்றங்கள் எவையும் இல்லையென தெரியவருகின்றது.

அதற்கமையவே நாட்டு மக்கள் மீது அதிக வரிசுமை சுமத்தப்படுகின்றது. குறிப்பாக இந்த வரி விதிப்பு முறைமை நீதியானதாக இல்லை. காரணம் அரசாங்கமானது மக்களிடத்தில் வரி அறவிடும் போது அறவிடும் முறைமை, வரி வழங்கும் முறைமை, என்பன இலகுவானதாக அமைய வேண்டும் அத்துடன் வரி விதிப்பு, அறவீட்டு முறைமைகள் சட்டத்துக்கு அமைவானதாக இருத்தல் வேண்டும்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட வற் வரி சட்டமூலம் பாராளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ அனுமதி பெறப்படாமல் கொண்டுவரப்பட்டதால் உயர் நீதிமன்றமும் இந்த சட்ட மூலத்தினை நிராகரித்து தடை உத்தரவு வழங்கியது. இவ்வாறான நிலையிலேயே மீண்டும் இந்த வரிக்கொள்கையை அமுல் படுத்த இந்த அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகின்றது.

இவ்வாறான பாராதூரமான சிக்கல்கள், குழப்பங்களின் மத்தியிலேயே மீண்டும் வற் வரி திருத்தச் சட்டமூலம் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. ஆனால் இந்த சட்டத்தில் எந்தவித பாரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. 

வைத்திய துறை மற்றும் பால் மா உள்ளிட்டவைக்கு விதிக்கப்பட்ட வரிகள்,தொலை தொடர்பாடல் இயந்திரங்களுக்கான வரிகள் உள்ளிட்டவற்றில் மாத்திரம் சிறிது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை திருத்தங்கள் அல்ல மக்களை் எதிர்ப்புக்களை சமாளிப்பதற்கான சூட்சம செயற்பாடுகள். 

அண்மையில் சுதந்திர கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் இந்த சட்டமூலத்தில் தமக்கு உடன்பாடில்லை திருத்தங்கள் வேண்டும் என்று வலியுறுத்தினர் இருப்பினும் அமைச்சரவை கூட்டத்தில் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இந்ந சட்டமூலத்தில் நீதி, நியாயம், இலகுவான வரி அறவீட்டு முறைமை உள்ளிட்ட வரி விதிப்பிற்கான எந்தவித படிமுறைகளும் இதில் பின்பற்றப்படவில்லை என்கதை அறிந்தும் சுதந்திர கட்சி பிரதிநிதிகள் ஆதரவு வழங்ககூடாது.

அதேநேரம் அரசாங்கம் ஒரு வருடம் பூர்த்தியாகும் போது 25 வீத வருமானத்தினை வரி விதிப்பினாலேயே பெற்றுக்கொண்டுள்ளது. மஹிந்த அரசும் இவ்வாறன செயற்பாடுகளையே முன்னெடுத்து வந்தது. அதேநேரம் இந்த அரசாங்கத்தினால் சட்டத்திற்கு முறனாக மக்களிடத்தில் வரி அறவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் நீதி மன்ற தடை உத்தரவுக்கு முன்னர் பெறப்பட்ட வரித்தொகையை மீண்டும் மக்களுக்கு சென்றடையச் செய்வதற்கான பொறிமுறை ஒன்றையும் உருவாக்க வேண்டும்.

அதனால் வற் வரி மூலத்திற்கு அன்று போன்றே இன்றும் நாம் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். அரசாங்கத்தில் உள்ள சிலரும் கூட இந்த வரிவிதிப்புக்கு எதிரகாக பேசுகின்றனர். 

இதேவேளை “வற்” வரி தொடர்பில் மக்களின் பக்கமிருந்து சுதந்திரக்கட்சியினர் சிந்தித்து வாக்களிப்பது அவர்களின் கடமையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51