நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சென்ற நோயாளர்கள் பெரிதும் பாதிப்பு

Published By: Gayathri

27 Sep, 2021 | 04:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் நாடளாவிய ரீதியில் இன்று ஐந்து மணி நேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டதனால் வைத்தியசாலைகளுக்கு பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக  வார இறுதி தினங்களைத் தொடர்ந்து திங்கட்கிழமை நாட்களில் அதிகமான நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தருவது வழமையாகும். 

அந்தவகையில் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவிக்கு காலையிலேயே நோயாளர்கள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். 

இருந்போதும் தாதியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் காலை 7மணி தொடக்கம் நண்பகல் 12மணி வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்ததால் நோயாளர்கள் பெரும் சிரமத்துடன் காத்திருந்ததை காணமுடிந்தது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவர்களாகவும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் தொடர்பாக அரச தாதியர்களின் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிடுகையில்,

நோயாளர்களை சிரமத்துக்கு ஆளாக்கும் நோக்கத்துக்காக சுகாதார ஊழியர்களின் போராட்டம் மேற்கொள்ளவில்லை. மாறாக கொவிட் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு சுகாதார ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

விசேடமாக கொவிட் தொற்று கட்டுப்படுத்தவதற்காக உயிரை பணயம் வைத்து செயற்படுகின்ற சுகாதார துறையின் கொரோனா உதவி தொகையாக மாதாந்தம் 7500 ரூபா வழங்கி வந்தது.

தற்போது அந்த தொகையை முற்றாக நீக்கி இருக்கின்றது. அதேபோன்று எமது ஊழியர்கள் ஆளணி பற்றாக்குறை காரணமாக மேலதிக நேரமாக மாதத்துக்கு 200 முதல் 250 மணித்தியாலங்கள்  சேவை செய்கின்றனர். அதற்கான கொடுப்பனவையும் குறைத்திருக்கின்றது.

அத்துடன் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருக்கின்றபோதும் அதனை செய்வதும் இல்லை. ஊழியர்களுக்கு தேவையான கொவிட் பாதுகாப்பு வசதிகளையும் இதுவரை வழங்கவில்லை.

அதேபோன்று விடுமுறை கொடுப்பனவு, சுகாதார சேவையை மூடிய சேவையாக மாற்றவேண்டும். 

கொவிட் விசேட விடுமுறையில் குறைப்பு செய்யாமல் முழுமையாக வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

எமது போரட்டம் இன்று வெற்றிகரமாக முடிவடைந்தது. நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியசாலைகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கி இருக்கின்றோம்.

அந்தத் தினத்துக்குள் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் தொடர்ந்து போராட்டத்துக்கு செல்வோம். அதுதொடர்பில் எதிர்வரும் புதன் கிழமை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44