இலங்கை மீது வலுவான அழுத்தத்தை சர்வதேசம் உருவாக்க வேண்டும் -  விக்னேஸ்வரன்

Published By: Digital Desk 3

27 Sep, 2021 | 02:52 PM
image

(நா.தனுஜா)

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எமது மூதாதையர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், பிறிதொரு வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை நாம் விரும்புகின்றோம் என்றும் கூறுவது சங்கடமான விடயமாகும்.

இருப்பினும் 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பிற்கு முன்னர் இலங்கை டொமினியன் அந்தஸ்த்தில் இருந்தபோது தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவருக்கான உயர் அங்கீகாரம் காணப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தற்போது எமது மக்களுக்குச் சொந்தமானவற்றை அவர்களிடமே ஒப்படைப்பதற்கான மிகவும் வலுவான அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட 'தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று' என்ற ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,

இலங்கையில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்யமுடிந்துள்ளமையினையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கை அரசாங்கத்தையொத்த கொவிட் - 19 வைரஸும் நாம் உத்வேகத்துடன் வளர்ச்சியடைவதை அனுமதிக்கவில்லை. மாறாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் அது எம்மைக் கட்டுப்படுத்துவதற்கும் திணறடிப்பதற்குமே விரும்பியிருக்கின்றது.

வைரஸ் பரவல் அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு நாடுகள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும், இத்தகைய 'சூம்' உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக நாம் இந்த இணையவழிக்கலந்துரையாடலை வெற்றிகரமாக நடாத்துவதற்கான அனைத்துத் தயார்ப்படுத்தல்களையும் எமது இளம் ஏற்பாட்டாளர்கள் செய்திருக்கின்றார்கள்.

இது ஓர் முக்கியமான நாளாகும். இலங்கையில் கடந்த 70 வருடகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவத்தை ஆவணப்படமாக வெளியிடுகின்றோம். இது இலங்கையில் தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கில் எவ்வாறு நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என்பதை விளக்குவதாக அமையும்.

நாம் வெகுகாலத்திற்கு முன்னரே இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கவேண்டும். அதுமாத்திரமன்றி நாம் இதுபோன்ற மேலும் பல ஆவணப்படங்களை வெளியிட்டிருக்கவேண்டும். இருப்பினும் எம்மால் அதனைச் செய்யமுடியாமல்போய்விட்டது.

ஆனாலும் இங்குள்ள நிலைவரங்கள் தொடர்பில் தாமதமாகவேனும் இந்த ஆவணப்படத்தை வெளிக்கொணரமுடிந்தமையினையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

அதேவேளை தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பு தொடர்பில் சர்வதேச ரீதியில் அங்கீகாரம்பெற்ற கல்வியியலாளர்களும் அறிஞர்களும் பேசமுன்வருவது மகிழ்ச்சியளிப்பதுடன் அதனைப் பெரிதும் வரவேற்கின்றேன்.

மேலும் இந்த ஆவணப்பட வெளியீட்டில் எம்மோடு இணைந்திருக்கின்ற மூத்த தமிழ் அரசியல்வாதியும் கடந்த 2013 ஆம் ஆண்டில் என்னை அரசியலுக்குள் அழைத்துவந்தவருமான இரா.சம்பந்தன் அவர்கள் 1948 ஆம் ஆண்டிலிருந்து இழந்த தமிழ்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அமைதிவழியிலான போராட்டங்களைக் கடந்த 1956 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துவந்தார் என்று சுட்டிக்காட்டிய சி.வி.விக்னேஸ்வரன், அதனைத்தொடர்ந்து 'தாய்நிலம்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு தொடர்பில் பேசவிருந்த சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை அறிமுகம் செய்துவைத்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 'நில அபகரிப்பு தொடர்பான இந்தக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டிருக்கும் இளைஞர்கள் குறிப்பிட்டுக்கூறப்படவேண்டியவர்களாவர். எமது எதிர்காலம் தொடர்பான ஒரே நம்பிக்கையாக இந்த இளைஞர்களே இருக்கின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் அவர்களது செயற்பாடுகளால் நான் பெரிதும் கவரப்பட்டேன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இளைஞர், யுவதிகளே, எமது மக்கள் உங்கள்மீது பாரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள்' என்றும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாகப் பிரகடனம் செய்யப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்துடன் ஒப்பிடுகையில், ஆங்கிலேயர்களின்கீழ் ஓர் காலனித்துவ நாடாக இருந்தபோது தமிழர்களுக்கான அங்கீகாரம் உயர்வாகக் காணப்பட்டதாகக் கருதுகின்றீர்களா? என்று நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கிய தனா ஞானியினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், 'ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எமது மூதாதையர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது, இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது சற்று சங்கடமான விடயமாக இருக்கின்றது.

இலங்கை 'டொமினியன்' அந்தஸ்த்தின்கீழ் இருந்தபோது தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவருக்கு ஒப்பீட்டளவில் உயர் அங்கீகாரம் காணப்பட்டது. வெளிநாட்டவரின் ஆட்சியின்கீழ் எமக்கான அங்கீகாரம் இருந்தது என்றும் நாம் அவர்களுடைய ஆதிக்கத்தில்கீழ் இருப்பதை விரும்புகின்றோம் என்றும் கூறவேண்டியிருப்பது வெட்கத்திற்குரிய விடயம் என்பதுடன் நான் கூறவிரும்பவில்லை.

இருப்பினும் 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழிருப்பதை விடவும் டொமினியன் அந்தஸ்த்தின்கீழ் இருப்பது ஒப்பீட்டளவில் சிறந்தது என்று கூறுவது தவிர்க்கப்படமுடியாததாக உள்ளது. ஏனெனில், அதன் பின்னர் எமது உரிமைகள் பலவும் பறித்துக்கொள்ளப்பட்டன. இருப்பினும் இந்தக் கேள்வியைக் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.

தற்போது எமது மக்களுக்குச் சொந்தமானவற்றை அவர்களிடமே ஒப்படைப்பதற்கான சர்வதேசத்தின் மிகவும் வலுவான அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கப்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டியதே  அவசியமானதாக இருக்கின்றது' என்று பதிலளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04