கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 3

27 Sep, 2021 | 10:50 AM
image

(எம்.மனோசித்ரா)

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். துப்பாக்கியை எடுத்து போராடுவது மாத்திரமே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அரசாங்கம் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்தார்.

எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் முன்வைத்தவர்கள் இன்று , அதற்கும் அப்பால் சென்று ஒரு அபாயமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும்  முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது 300 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை 2024 ஆம் ஆண்டாகும் போது 1,000 மெகாவோல்ட் ஆக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது டீசல் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும், எரிவாயு மூலமாக மின் உற்பத்தி செய்யக் கூடிய தொழிநுட்பமும் இங்கு காணப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே அமைச்சரவைக்கு கூட அறிவிக்காமல் கெரவலப்பிட்டி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக கடந்த ஜூன் மாதம் கோரப்பட்ட விலை மனு கோரல்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார உற்பத்தி என்பது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயமாகும். உலகில் எந்தவொரு நாடும் தமக்கான மின் உற்பத்தியை வெளிநாடுகளிடம் கையளிக்காது. ஆனால் இலங்கை அதனை செய்திருக்கிறது.

இது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். துப்பாக்கியை எடுத்து போராடுவது மாத்திரமே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அரசாங்கம் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. இனிவரும் காலங்களில் எமக்கு மின்சாரத்தை வழங்குவதை அமெரிக்காவே தீர்மானிக்கும்.

அமைச்சரவைக்கு கூட அறிவிக்காமல் ஒரு தனிப்பட்ட நபரினதும், ஒரு குடும்பத்தினதும் விருப்பத்திற்காக செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மின் விநியோகத்திலும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் முன்வைத்தவர்கள் இன்று , அதற்கும் அப்பால் சென்று ஒரு அபாயமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பகிரங்கமாகவே அமெரிக்க விரோதப் போக்கினைக் கொண்டுள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார எங்கிருக்கிறார்கள்? அவர்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாகவுள்ளது. அமெரிக்க பிரஜையொருவரை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்காக நாட்டின் அரசியலமைப்பையே மாற்றிய ஒரேயொரு அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் மாத்திரமே.

இவ்வாறு அரசியலமைப்பை மாற்றி பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்ட அமெரிக்க பிரஜை அவரது நாட்டின் மீது காணப்படுகின்ற பற்றின் காரணமாக பிரிதொரு அமெரிக்க பிரஜைக்கு கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்கினை விற்பனை செய்துள்ளார். மீண்டுமொரு கொவிட் அலை ஏற்பட்டு மக்களின் கடுமையான விரோதத்தினை எதிர்கொள்ளும் போது இவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு சென்று அங்கு தஞ்சமடைந்து விடுவார்கள். அந்த தேவைக்காகவே தற்போது இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30