இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியும் புத்திஜீவிகளும்

Published By: Digital Desk 2

26 Sep, 2021 | 05:35 PM
image

பேராசிரியர் செ.சந்திரசேகரம்

 இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்டபிள்யூ.டீ.லக்ஸ்மன், தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இலங்கையின் மத்திய வங்கியின்வரலாற்றில் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் ஆளுநராக பதவி வகித்தமை இதுவே முதல் தடவையாகும்.பேராசிரியருக்கு இலங்கையின் புத்திஜீவிகளின் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும்இருக்கின்றது. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேவையாற்றி இப்பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக இருந்து, பல நூற்றுக்கணக்கானவிரிவுரையாளர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு புலமைப் பரிசில்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார். 

இலங்கையின் சமூகப்பொருளாதார அரசியல் அபிவிருத்தி நிலையில் இவர் இப்பதவிக்கு வந்தமை துரதிஷ்டவசமானது.தற்போது அவர் பதவி விலகி செல்வது அதிஷ்டவசமானது என்பதை எதிர்வரும் காலங்கள் அவருக்கும்எங்களுக்கும் புரிய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. அதேநேரம் இலங்கையின்தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு வகையில் புத்திஜீவிகளும் காரணமாகின்றனர். 

2009ஆம் ஆண்டுயுத்தம் முடிவடைவதற்கு முன்னர் கலாநிதி கலகம, தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான்பெரேரா, விக்டர் ஜவன், பேராசிரியர் ஜயதேவ உயங்கொட போன்றவர்களைத் தவிரப் பல புத்திஜீவிகள்இலங்கையின் இனமுரண்பாடும், யுத்தமும் இலங்கைப் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்துள்ளதுஎன்பது குறித்து மூச்சுக்காட்டவில்லை.  

1998ஆம் ஆண்டுஇலங்கையின் 50ஆவது ஆண்டு சுதந்திரத்தின் போது பொருளாதார முன்னேற்றங்களின் தடுமாற்றநிலைகள் என்று ஓர் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இலங்கையின் பிரபல்யமான பொருளியளாளர்களால்எழுதப்பட்டது. இவ்வெளியீட்டுக்கு பதிப்பாசிரியராக இருந்தவர் பேராசிரியர்.டபிள்யூ.டீ.லக்ஸ்மன்.பதினைந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டு இருந்தன.

அதில் ஒரு கட்டுரையாவது இலங்கையின் இனமுரண்பாடுகள் யுத்தம் அல்லது அரசாங்கத்தின் வார்த்தையில் பயங்கரவாதம் எவ்வாறு இலங்கைப் பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்பதை கருப்பொருளாகக் கொண்டு எழுதப்படவில்லை. இதனைப் பேராசிரியர் லக்ஷ்மன் தன்னுடைய முன்னுரையில் இக்குறைபாட்டினை சுட்டிக் காட்டியிருக்கிறார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54