சீன எதிர்ப்புப்பொறிக்குள் அவுஸ்திரேலியாவைத் தள்ளும் ஆக்கஸ் உடன்படிக்கை 

Published By: Digital Desk 2

26 Sep, 2021 | 05:16 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

அமெரிக்கா,பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த வாரம் ஒப்பந்தமொன்றை அறிவித்தன.அதுவொரு பாதுகாப்பு ஒப்பந்தம். 

இதன் கீழ், அமெரிக்காவும்,பிரித்தானியாவும் அணுசக்தி வல்லமை கொண்ட நீர்மூழ்கிக்கப்பலை உருவாக்குவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு உதவி செய்யும்.  

ஏனிந்தஉடன்படிக்கை? என்பதை மூன்று நாடுகளும்வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும், பசுபிக் சமுத்திரத்திலும், தென்சீனக்கடலிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டி சீனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான், மூன்று நாடுகளினதும் நோக்கம்என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

உடன்படிக்கைபற்றி கடந்த 16ஆம் திகதிஅவுஸ்திரேலிய பிரதமர் பசப்பு வார்த்தைகளால்விபரித்தார். மூன்று நாடுகளின் தொழில்நுட்பம்,விஞ்ஞானிகள், பாதுகாப்பு படைவீரர்கள் எல்லோரும், எல்லாமும் சேர்ந்து பிராந்தியத்தின் பந்தோபதஸ்த்தை உறுதிப்படுத்தல். 

அதன் மூலம் சகலருக்கும்நன்மை கிடைக்கச் செய்வதே தமது நோக்கமெனபிரதமர் ஸ்கொட் மொரிஸன் குறிப்பிட்டார். 

இந்த உடன்படிக்கைக்கு சூட்டப்பட்ட பெயர் ‘ஆக்கஸ்’ என்பதாகும்.இதன் கீழ், அவுஸ்திரேலியாவில் அணுசக்திஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்தொகுதி ஏற்படுத்தப்படும். இதற்கு ஒன்றரை வருடஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவிற்கும், பிரித்தானியாவுக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உண்டு. அவுஸ்திரேலியாவிற்கு கிடையாது. 

இங்கொருவார்த்தை விளையாட்டு உண்டு. நீர்மூழ்கிக் கப்பல்கள்‘அணுசக்தி ஆற்றல்’ கொண்டவையாக இருக்கலாம்.அதாவது, அணுசக்தியின் மூலம் இயங்கக்கூடியவை. நீர்மூழ்கிகள்‘அணுவாயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தக்கூடியவையாகவும்’ காணப்படலாம். இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்கும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13