ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்த பெண் ஐ.நா.வின் நல்லெண்ண தூதுவராக நியமனம்

Published By: Ponmalar

16 Sep, 2016 | 04:09 PM
image

ஐ.எஸ். தீவிரவாதிகளின்  பாலியல் அடிமையாக இருந்த நதியா முராத்   ஐ.நா.வின் மனிதக் கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவசெய்துள்ள நதியா, இனப்படுகொலை மூலம்  பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வாழை்வை அமைத்துக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி மனித கடத்தலை இல்லாது ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014 ஆம்  ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற போரின் போது நதியாவின் கண் முன்னர் அவரது தாய் மற்றும் சகோதரர் ஐ.எஸ். தீவிரவாதிகாளால் கொள்ளப்பட்டனர். பிறகு நதியாவும் தனது 19 ஆவது வயதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக ஆக்கப்பட்டார்.

நதியா பலமுறை தப்பிக்க முயன்றும் அவரால் தப்பிக்க இயலவில்லை. ஒருமுறை 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். இதனால் சுயநினைவை இழந்தார்.

இந்நிலையில் ஒருவழியாக தப்பித்த நதியா ஜேர்மனிக்கு சென்றதன் பிறகு அவர் வைத்தியம் பெற்றுக்கொண்ட நிலையில் குணமடைந்தார்.

இவ்வாறு பல இன்னல்களை அனுபவித்த நதியா இன்று ஐ.நா.வின் மனிதகடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47