இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நாம் ஒற்றுமையாக உள்ளோம் - குவாட்  தலைவர்கள்

Published By: Digital Desk 3

25 Sep, 2021 | 10:11 PM
image

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் எமது வலுவான ஒற்றுமை வெளிப்பட்டுள்ளது. ஏற்பட கூடிய பெரும் சவால்களையும் வெள்ளிக்கொள்ள முடியும் என குவாட் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட, நான்கு நாடுகளின் குவாட் தலைவர்கள் வொஷிங்டனில் முதன்முறையாக நேரில் சந்தித்து உரையாடினர். இதன் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்த, பிரதமர் நரேந்திர மோடி குவாட் அணி தலைவர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரும்  பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி கூறுகையில்,  இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கு உதவுவதற்காக நமது நான்கு நாடுகளும் 2004 ஆம் ஆண்டு, சுனாமிக்குப் பிறகு முதல் முறையாக சந்தித்துள்ளோம். இன்று, உலகம் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக போராடும் போது, நாம் மீண்டும் மனிதகுல நலனுக்காக ஒன்றிணைந்துள்ளோம் என  பிரதமர் மோடி தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.

குவாட் அமைப்பு தடுப்பூசி விநியோக விடயத்தில் இந்தோ - பசிபிக் நாடுகளுக்கு பெரிதும் உதவும். குவாட்டில் நமது பங்களிப்பு உலகில் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஜோ பைடன்

நான்கு ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான், கொரோனா முதல் காலநிலை வரை பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒன்றாக வந்துள்ளன. எப்படி செயல்படுவது என்பது எமக்கு தெரியும் எனவே சவால்களை வெல்லலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய பிரதமர்

இந்தோ - பசிபிக் பிராந்தியம் இன்று பெரும் சவால்களைக் கொண்டுள்ளது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும். குவாட் நாடுகளின் கடைசி சந்திப்பு முடிந்து 6 மாதங்களில் நிறைய சாதிக்கப்பட்டுள்ளது. பசிபிக் மண்டலத்தில் நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பது வெளிப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56