பாடும் நிலவின் ஓராண்டு நினைவஞ்சலி

Published By: Digital Desk 2

25 Sep, 2021 | 01:24 PM
image

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனும் ஓர் சங்கீத சாம்ராஜ்யம் ரசிகர்களின் துன்ப சாகரத்தில் மூழ்கி இன்றுடன் ஒரு வருடம் கண்ணீரில் கரைந்தது.

1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஆந்திர மாநிலம்  நெல்லூரில் சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 

இரண்டு சகோதரர்கள்,ஐந்து சகோதரரிகள்.மகன் சரண்,மகள் பல்லவி.இவர் தந்தையும் ஓர் பாடகரே. இருந்தும் எஸ்பிபியை ஓர் இன்ஜினியராக்க வேண்டும் என்பதே இவரின் கனவு.

ஆனால் தந்தை வழியே மகனும் இசையில் ஆர்வம் கொண்டு பிற்காலத்தில் வையம் போற்றும் இசைக்கலைஞரானார்.

ஆந்திர மாநில அனந்தபூரில் JNTU யுனிவர்சிட்டி யில் படிக்கும்போது தைபோஃயிட் வந்ததால் தொடர்ந்து கல்லூரியில் படிக்க முடியாத சூழ்நிலையில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டார்.

சென்னையில் ஓர் கல்லூரியில் படித்துக்கொண்டே இசைத்துறையில் ஈடுபடத்தொடங்கினார்.

பின், இளையராஜா,பாஸ்கர்,கங்கை அமரன் போன்றோரின் நட்பு கிடைக்கவே அவர்களுடன் இணைந்து இசைக்கச்சேரி களில் தனது ஆற்றலை பதித்தார்.

தமிழ்த்திரையில் பாட வேண்டும் என்பதே இவரின் லட்சியமாக இருந்தது. 

ஆயினும் கடும் பிரயத்தனத்திற்கு பின் 1966 இல் தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணியின் இசையில் ' ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா ' என்ற தெலுங்கு  படத்தில் முதல் முறையாக பாடும் வாய்ப்பு எஸ்பிபிக்கு கிடைத்தது. 

இவரின் திறமையை அறிந்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஹோட்டல் ரம்பா என்ற தமிழ் படத்தில் "அத்தானோடு  ' இப்படியிருந்து எத்தனை நாளாச்சு ' என்ற பாடலை முதல் முறையாக தமிழில் பாடவைத்தார். 

தமிழ்த்திரையில் அப்போது இசைத்துறையின்  வெற்றிக் கொடியை  தன்னகத்தே கொண்டிருந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு  நிகரான ஓர் பாடகர் உதயமாகிவிட்டார் என ஊடகங்களில் செய்தி பரவி,எஸ்பிபி தமிழ் நாடு முழுவதும் அறியப்பட்டார்.

 1966 முதல் எஸ்பிபி மரணத்தை தழுவும் வரை இசையை தழுவிக்கொண்டிருந்தார். 16 மொழிகளில் சுமார் 42000 பாடல்களை பாடி உலக சாதனை செய்தவர் எஸ்பிபியே!

இது ஓர் கிண்ணஸ் சாதனை. ஆறு முறை தேசிய விருது பெற்றுள்ளார். கர்நாடக சங்கீதம் தெரியமாலே'' சங்கராபரணம்'' படத்திற்காக குறுகிய காலத்தில் கர்நாடக சங்கீதம் பயின்று இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் எஸ்பிபி அவர்கள். 

என்.டி.ராமராவ்,நாகேஷ்வரராவ் போன்ற பெரிய தெலுங்கு நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்பிபி. 

ஏறத்தாழ இந்திய மொழிகளில் நிறைய பாடல்களைப் பாடிய பெருமை எஸ்பிபிக்கு மட்டுமே உரிய சிறப்பு.

இவர் பெறாத விருதுகளே இல்லை எனலாம்.தமிழக அரசின் கலைமாமணி விருது ,மத்திய அரசின் '' பத்மஸ்ரீ '',(2001)பத்மபூஷண் (2011)போன்ற உயர் விருதுகளை கொண்டவர் எஸ்பிபி. 

மும்பை பாடகர்கள் இவரின் வரவையிட்டு வயிற்றில் புளி கரைத்தது போல் உணர்ந்தனர்.தொடர்ந்து ஹிந்தியில் பாடினாலும்,தமிழ் தெலுங்கு மொழிகளில் தான் அதிகம் பாடினார் எஸ்பிபி.

 மக்கள் திலகம்,நடிகர் திலகம்,கமல்,ரஜினி முதற்கொண்டு இப்போதைய தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் பாடிய பாடகர் என்ற சிறப்பினை பெற்றவர் எஸ்பிபி ஒருவரே!

எல்லா நடிகர்களுக்கும் ஏற்றவாறு குரலில் மாற்றம் செய்து பாடும் திறமையை கொண்டவர் எஸ்பிபி. 

50 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது இயற்கை நிறைந்த நடிப்பின் இயல்பை பதிவிட்டவர் எஸ்பிபி.

கமலஹாசன்  நடித்த 120 இற்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்ட போது கமலஹாசனுக்காக  டப்பிங் கொடுத்தவர் இவராவார்.

தனது 21 ஆம் வயதிலே சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் கொண்டார் எஸ்பிபி. தற்பெருமை என்பது இக்கலைஞனிடம் கடுகளவேனும் கிடையாது.

 இசையெனும் தென்றலை சுவாசித்த சங்கீத சிகரத்தின் இறுதி சுவாசம் கடந்த 2020.09.25 அன்று காற்றோடு கலந்தது.

எஸ்.பி.பி யின் ஈடு செய்ய முடியாத இந்த பேரிழப்பு உலகம் முழுதும் வாழும் அவரது கோடிக்கணக்கான  ரசிகர்களுக்கு ஓர் பேரிடியாக அமைந்தது. 

கானக்குரலோன் மறைந்தாலும் கவியாய் ஓவியமாய் இசை வாழும் வரை எஸ்.பி.பி எனும் இசைக்கோமகன் ரசிகர்கள் நெஞ்சமதில் என்றென்றும் வாழ்வார் நீக்கமற!

கணேசன் ஆச்சாரி சதீஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13