அம்பாந்தோட்டை பகுதியில் காணமல்  போனதாக கூறப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனை மறைத்து வைத்துவிட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் பெலியத மற்றும் வீரகெடிய பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

அதுமாத்திரமின்றி குறித்த இளைஞர் தங்கியிருந்த உறவினர்களின் வீட்டிலும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த இளைஞர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்டது.

இதனால் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த இளைஞரை கைதுசெய்தமைக்கான பதிவுகள் எவையும் பொலிஸாரிடம் இருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த இளைஞர் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை  எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.