தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஏற்று சேவைக்கு திரும்புமாறு அதிபர் - ஆசிரியர்களிடம் கோரிக்கை - பேராசிரியர் கபில பெரேரா

Published By: Digital Desk 3

24 Sep, 2021 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

வரவு - செலவு திட்டம் என்பது இரகசியமானதொரு விடயமாகும். அதனை சமர்ப்பிக்க முன்னர் அதனூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களை பகிரங்கப்படுத்த முடியாது. எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு சேவைக்கு திரும்புமாறு அதிபர் - ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது வரவு - செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டால் அதனை அறிவிக்க முடியும். அது குறித்து எனக்கும் தெரியாது. எனவே பாராளுமன்றத்தில் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை காத்திருக்குமாறு கோருகின்றோம்.

மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை சேவைக்கு திரும்புமாறு கோருகின்றோம். அவ்வாறு சேவைக்கு திரும்பும் பட்சத்தில் அதிபர் - ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் மதிப்பு மேலும் உயர்வடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02