பொய்யான வாக்குறுதிகளை இனியும் நம்பாது காத்திரமான தீர்மானம் ஒன்றினை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் - கூட்டமைப்பு

Published By: Digital Desk 3

23 Sep, 2021 | 04:45 PM
image

(ஆர்.யசி)

உள்ளக பொறிமுறைகள் மூலமாக பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படும் என்றால் அதற்காக அரசாங்கம் 12 வருட காலத்தை கடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

யுத்தம் முடிவுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளக பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஏன் அவ்வாறான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்புகின்றது.

ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கால அவகாசங்களை வழங்காது பொறுப்புக்கூறல் விடயங்களை வலுவாக்கும் காத்திரமான  தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கும் நகர்வுகளை சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ உரையாற்றியுள்ள நிலையில் உள்ளக பொறிமுறை மூலமாக பொறுப்புக்கூறல் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பதை  தெரிவிக்கும் போதே  அவர் இதனை கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44