காலி நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த புதிதாக 2 பாலங்கள்

Published By: Vishnu

23 Sep, 2021 | 02:23 PM
image

தெற்கு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காலி நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த புதிதாக 2 பாலங்கள் மற்றும் அடையாளங் காணப்பட்ட சகல வீதிகளையும் துரிதமாக விஸ்தரித்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோ ஆலோசனை வழங்கியுள்ளார்.

May be an image of 2 people and people sitting

நாடு முழுவதிலுமுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யும்  திட்டத்திற்கு அமைவாக  தெற்கு  வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காலி நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்துவதற்காக புதிதாக இரண்டு பாலங்கள் மற்றும்  அடையாளங் காணப்பட்ட சகல வீதிகளையும் துரிதமாக விஸ்தரித்து அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு தான் ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோ தெரிவித்தார்.

 காலி நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்துவற்காக இரு பாலங்கள்  நிர்மாணிக்கவும் எட்டு வீதிகளை விஸ்தரிக்கவும் வேண்டியுள்ளதாக    நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும்வீதி அபிவிருத்தி அதிகார  சபை என்பன அடையாளம் கண்டுள்ளன. 

இந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான பூர்வாங்கத் திட்டம் தயாரிக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். 

அதற்கமைய இத்தேபான மற்றும்  மாதுகங்க வரை இரு பாலங்கள் நிர்மாணித்தல் மற்றும் கொழும்பு-காலி வீதியில் அதிவேக நெடுஞ்சாலை பிரவேச வீதி வரை 4 வழிப்பாதையை விஸ்தரித்தல், தெற்க அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ  பரிமாற்ற  வீதியில் இருந்து கராபிட்டிய போதனா வைத்தியசாலை வரை புதிய வீதி நிர்மாணித்தல், காலி பத்தேகம வீதியில் ஹிரிம்புர வரை விஸ்தரித்தல், காலி நகரிலுள்ள பிரதான வீதிகளை அபிவிருத்தி செய்தல், காலி  வக்வெல்ல வீதியை 4 வழிப்பாதையாக விஸ்தரித்தல், ரிச்மண்ட் ஹில் வீதியை கராபிட்டிய வரை விஸ்தரித்து அபிவிருத்தி செய்தல், ஹிரிம்புர சந்தியில் இருந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வரையான வீதியை அபிவிருத்தி செய்தல், பின்னதுவயில் இருந்து காலி வீதி வரையில் உள்ள வீதிக்கு இணையாக புதிய  வீதியொன்றை நிர்மாணித்தல் என்பன இதில் அடங்கும் .

இந்த அனைத்து வீதி கட்டமைப்புகளுக்கும் தேவையான வீதி   சமிக்ஞை பலகைகள்,  ஒளி சமிக்ஞை கட்டமைப்புகள், சுற்றுவட்டங்கள் என்பவற்றை  அபிவிருத்தி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56