அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு கால­நிலை மாற்­றத்தால் ஏற்­படக் கூடிய பாதக விளை­வு­களைத் தடுக்க போது­மான நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­றி­யுள்­ள­தாக குற்­றஞ்­சாட்டி 21 சிறு­வர்­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்று அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட இந்த வழக்குத் தாக்கல் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அமெ­ரிக்­கா­வெங்­கு­முள்ள 8வய­துக்கும் 19 வய­துக்கும் இடைப்­பட்ட வய­

து­டைய மேற்­படி சிறு­வர்­களை உள்­ள­டக்­கிய 'எங்கள் சிறு­வர்­க­ளது அறக்­கட்­டளை' என்றழைக்­கப்­படும் மேற்­படி குழு அமெ­ரிக்க அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஒரேகன் மாவட்ட நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­துள்­ளது.

அந்த சிறு­வர்கள் சட்­டத்­த­ரணி ஜூலியா ஒல்­ஸ­னுடன் இயுஜின் பிராந்­தி­யத்­தி­லுள்ள நீதி­மன்­றத்­துக்குச் சென்று வழக்குத் தாக்கல் செய்­துள்­ளனர்.

பராக் ஒபா­மாவின் அர­சாங்கம் கால­நிலை மாற்றம் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவறி இளம் தலை

முறையினரது உரிமைகளை மீறியுள் ளது என அந்த சிறுவர்களால் தாக்கல்

செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.