கொவிட் மரணங்களில் 77 வீத மரணங்களுக்கு அரசாங்கம் பொறுக்கு கூறவேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

23 Sep, 2021 | 10:56 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் காரணமாக மரணித்தவர்களில் 77 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.  தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்காதமையே இதற்கு காரணமாகும். அதனால் இந்த மரணங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார பிரிவினரால் வழிகாட்டல் ஒன்றை அரசாங்கத்துக்கு அறிமுகப்படுத்தி இருந்தது. அதில் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றே தெரிவித்திருந்தது. ஆனால் கொவிட் தொடர்பான ஜனாதிபதி செயலணி அதனை ஏற்றுக்கொள்ளாமல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள். அதன் விளைவாகவே இன்று கொவிட் காரணமாக மரணித்த மொத்த எண்ணிக்கையில் 77 வீதமானவர்கள் 60வயதுக்கு மேற்பட்டவர்களாகும். இந்த மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும்.

மேலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டாலும் 60 வயதை தாண்டி இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரமதர் திருட்டுத்தனமாக தடுப்பூசி ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்கள் எந்த தடுப்பூசி ஏற்றினார்கள் என்பதை கூட வெளிப்படுத்த வில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றிக்கொண்டுள்ள தடுப்பூசி தொடர்பாக அரச தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர் தடுப்பூசி ஏற்றிய உடனே அதுதொடர்பில்  வெளிப்படுத்தினார்.

மேலும் கொவிட் பரவல் தீவிரமாகும்போது நாட்டை முடக்குமாறு ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் இருந்து வைத்தியர்கள் தெரிவித்து வந்தனர். அதேபோன்று ஏனைய துறைசார்ந்தவர்கள் தெரிவித்தனர். அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தபோது வியாபாரிகள் சுயமாக தங்கள் கடைகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கும் அரசாங்கத்தில் இருப்பவர்கள் எம்மை விமர்சித்தார்கள்.

என்றாலும் இறுதியில் அரசாங்கம் கடந்த மாதம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்த தீர்மானித்தது. அதனையும் முறையாக செய்யவில்லை. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் வீதியில் நடமாடுகின்றனர். ஆனால் பாடசாலைகளை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும் கொவிட் கட்டுப்படுத்தும் குழுவில் இருந்து வைத்தியர்கள் விலகுகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமல் அவர் நினைத்த பிரகாரம் செயற்படுகின்றார். அதேபோன்று அரச அதிகாரிகள் பதவி விலகுகின்றனர். அவர்களுக்கு சுதந்திரமாக செயற்படமுடியாது. இன்று அரச நிறுவனங்களுக்கு நியமிக்க புத்திஜீவிகள் இல்லை. அதனால் பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் பதவி விலகி, அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01