அரசாங்கத்திற்குள் முரண்பாடு : இன்று பிரதமருடன் முக்கிய கலந்துரையாடல்

Published By: Vishnu

23 Sep, 2021 | 08:53 AM
image

(ஆர்.யசி)

அமெரிக்க நிறுவனமொன்றுடன் கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கையை அரசாங்கம் செய்துகொண்ட முறைமை மற்றும் உடன்படிக்கையின் காரணிகள் குறித்து ஆளுங்கட்சி பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து பங்காளிக்கட்சிகள் இன்று பிரதமரை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். 

ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ள பங்காளிக்கட்சிகள், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது கடுமையான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில் ஆளுந்தரப்புக்குள் இது பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் குறித்த கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் யுக தனவிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு கொடுக்கும்  அமைச்சரவை பத்திரம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவையில் எழுத்துமூல ஆவணம் முன்வைக்காது, அனுமதியும் பெறப்படாது எவ்வாறு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது என ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அரசாங்கத்திற்குள் இது முரண்பாடுகளை ஏற்படுத்தியுருந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி ஆளுந்தரப்பின் பங்காளிக்கட்சிகள் கூடி இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

கொழும்பில் பொரளையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கொமியுநிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கூடிய பங்காளிக்கட்சிகள் அமைச்சரவை தீர்மானம் மறைக்கப்பட்டதாக வெளிப்படையாக குற்றம் சுமத்தி தமது நிலைப்பாடுகளை ஆராய்ந்திருந்தனர். 

ஜனாதிபதிக்கும் தெரியாது, பிரதமருக்கும் தெரியாது இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டமை மிகப்பெரிய தவறெனவு, ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் உடனடியாக இந்த நிலைமைகளை ஆராய வேண்டும் எனவும் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்திருந்தார். பிரதமுடன் நிலைமைகள் குறித்து ஆராயவும், அமைச்சரவை கூட்டம் முடியும்  வரையில் இணக்கப்பாடு இல்லாது இருந்த ஒரு விடயம் நள்ளிரவு எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது குறித்து பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08