பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்கு­வது நீரி­ழிவு பாதிப்பு ஏற்­படும் அபா­யத்தை 45 சத­வீ­தத்தால் அதி­க­ரிப்­ப­தாக ஜப்­பா­னிய ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

இந்த ஆய்வின் பெறு­பே­றுகள் உல­க­மெங்­கு­முள்ள 307,237 பேரை உள்­ள­டக்கி மேற்­கொள்­ளப்­பட்ட 21 ஆய்­வு­களை அடிப்­ப­டை

யாகக் கொண்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பகல் பொழுதில் சுமார் 60 நிமி­டங்கள் உறக்­கத்தில் ஆழ்­ப­வர்­க­ளுக்கு அவ்­வாறு உறங்­கா­த­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் நீரி­ழிவு ஏற்­படும் அபாயம் 45 சத­வீதம் அதி­க­மா­க­வுள்­ள­தாக டோக்­கியோ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வாளர் யமடா தொமாஹைட் தலை­மை­யி­லான ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு கூறு­கி­றது.

மேற்­படி ஆய்வின் முடி­வுகள் ஜேர்­ம­னிய முனிச் நகரில் இடம்­பெற்ற ஐரோப்­பிய நீரி­ழிவு ஆய்­வுக்­கான சங்கக் கூட்­டத்தின் போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தொழில் மற்றும் சமூக வாழ்வு என்­பன கார­ண­மாக பலரும் இரவு வேளையில் போதி­ய­ளவில் உறங்க முடி­யாத நிலைக்­குள்­ளாகி பகல் பொழு­தி­லான உறக்­கத்தை நாடு­வது வழ­மை­யா­க­வுள்­ளது

இந்­நி­லையில் பகல் பொழுதில் நீண்ட நேரம் உறங்குவது உடல் நல­னுக்கு தீங்கு விளை­விக்கக் கூடி­யது என எச்­ச­ரிக்

கும் ஆய்­வா­ளர்கள், ஆனால் 30 நிமிடத்

திற்கும் குறைந்த நேரம் பகல் பொழுது களில் உறங்குவது உடல் நலனுக்கு நன்மை பயக்கக் கூடியது என தெரிவிக்கின்றனர்.