மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை - ஓமல்பே சோபித தேரர்

Published By: Digital Desk 3

22 Sep, 2021 | 05:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய பகுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மதுபான பாவனைக்கு  கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய அநகாரிக தர்மபாலவை அவமதிக்கும் வகையில்  அவரது பிறந்த நாளன்று  மதுபான சாலைகளை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டு மக்கள் கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் பெரும் பாதிப்பை எதிர்க் கொண்டுள்ள நிலையில், மதுபானசாலைகளை அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான செயற்பாடாகும். அரசாங்கத்திற்கு குறைந்தபட்ச ஒழுக்கமேனும் உள்ளதா என்று கேட்க தோன்றுகிறது.

மதுபான பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் இலகுவில் தொற்றும்  என்று குறிப்பிடும் பட்சத்தில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளமை அரசாங்கம் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது.

இனிவரும் காலங்களில் சிறந்த அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற  வேண்டுமாயின் முதலில் பெரும்பான்மையின மக்கள் அரசியல் மற்றும் சமூக ரீதியில் தெளிவுப் பெற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24