3 நாட்கள் கோப் குழுவை கூட்டத் தீர்மானம்

Published By: Digital Desk 4

21 Sep, 2021 | 09:52 PM
image

(ஆர்,யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நிலவும் கொவிட் சூழலின் மத்தியில் கடந்த காலத்தில் கோப் குழுக் கூட்டங்களை நடத்த முடியாமல் போனதாகவும், அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரம் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் குழுவைக் கூட்டுவது தொடர்பிலும்  அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விசேட கூட்டத்தின் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Articles Tagged Under: கோப் குழு | Virakesari.lk

பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குழுவின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ள நிறுவனங்கள் பற்றிய விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டன.

கோப் குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர திசாநாயக, பாட்டலி சம்பிக ரவணக்க, ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம். மரிக்கார், மதுர விதானகே மற்றும் எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும், கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரட்ன ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிலவும் கொவிட் சூழலின் மத்தியில் கடந்த காலத்தில் கோப் குழுக் கூட்டங்களை நடத்த முடியாமல் போனதாகவும், அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரம் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் குழுவைக் கூட்டுவது தொடர்பிலும் இக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், 09வது பாராளுமன்றத்தின் கோப் குழுவின் இரண்டாவது அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இக்குழு கவனம் செலுத்தியது.

இதற்கமைய இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற விவாதமொன்றை நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இதனை விரைவில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதற்கமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் இவ்விடயத்தை முன்வைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தற்பொழுது கருத்தாடல்களுக்கு உள்ளாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றில் இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லிற்ரோ கேஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் கோப் குழுக் கூட்டங்களில் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர்  இங்கு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27