மைத்திரி, கோட்டா கொலை சதித்திட்டம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் - அமைச்சர் சரத் வீரசேகர 

Published By: Digital Desk 4

21 Sep, 2021 | 09:49 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்துட்டம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை ஆரம்பித்திருக்கின்றோம் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Articles Tagged Under: சரத் வீரசேகர | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை நேர கேள்வியின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார, முன்னாள் ஜனாதிபதி கொலை சதித்தி்ட்டம் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ளன. இவ்வாறான நிலையில் இதுவரை அதுதொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்துட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் குமார் என்பவர் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு சமர்ப்பி்த்திருந்த குரல் பதிவை அடிப்படையாகக்கொண்டு 2018 செப்டம்பர் 15 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் பணிப்பாளர் நாலக்க சில்வா கைது செய்யப்பட்டார். அதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கை 2019 செப்டம்பர் 9ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அத்துடன் இந்த கொலை சதிதிட்டத்துக்கு அரசிய கட்சிகள் எதுவும் சம்பந்தம் இல்லை. என்றாலும் 2019 மே மாதம் நாலக்க சில்வா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் சேவையை தொடர்வதற்கு விண்ணப்பித்திருந்தார். என்றாலும் 2019 டிசம்பர் மாதம் அரச சேவை ஆணைக்குழுவால் அது நிராகரிக்கப்பட்டது.

நாலக்க சில்வா தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய பொலிஸ் விசாரணை பிரிவால் ஆரம்பகட்ட விசாரணை இடம்பெற்று வருகின்றது.

விசாரணை அறிக்கை அதுவரை காலமும் நீதிமன்றில் இருந்தமையால் விசாரணை தாமதடைந்திருக்கின்றது. தற்போது அந்த அறிக்கையை பெற்றுககொண்டு அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51