மதுபான சாலைகளை திறப்பதற்கு எடுத்த தீர்மானம் மிகவும் கீழ்த்தரமானதாகும் - எம். உதயகுமார்

Published By: Digital Desk 3

21 Sep, 2021 | 06:40 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வருமானத்தை ஈட்டுவதற்காக மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமான தீர்மானமாகும்.

அத்துடன் தேயிலை  உற்பத்தி குறைவை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் சிலாேன் டீ என்ற நாமத்தில் கை வைத்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றானர்கள் மற்றும் மரணங்கள் குறைவடைந்துள்ள நிலையில் மதுபானசாலைகளை திறந்து மதுபான கொத்தனி ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வருமானத்தை ஈட்ட மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமான தீர்மானமாகும்.

அரசாங்கத்தின் இரசாயன உரம் இறக்குமதி தடையால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  

அதாவது கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி அமுலுக்கு வரும்வகையில் வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி அதிலே 30 சதவீதம் இலங்கை தேயிலையை கலப்படம் செய்து தேயிலை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது.

இதன் காரணமாக தரமற்ற தேயிலை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதன் மூலமாக சிலாேன் டீயினுடைய தரம் கேள்விக்குரியாக்கப்படும். சர்வதேச சந்தையில் ஒருமுறை நமது தேயிலை வாய்ப்பு இலக்கப்பட்டால் அதனை மீண்டும் பெறுவது சாத்தியம் இல்லை.

உதாரணமாக ஜப்பான் எமது நாட்டில் இருந்து 2015இல் 700மில்லியன் கிலாே கிரேம் தேயிலை கொள்வனவு செய்துவந்தது. ஆனால் தற்போது அது குறைவடைந்து 200 முதல் 300மில்லியன் கிலோ கிராம் வரையே கொள்வனவு செய்கின்றது.

குறிப்பாக சேதன உரத்தில் ஒருகிலாே தேயிலை உற்பத்தி செலவு ஆயிரத்தி 900ரூபாவாகும். அது வழமையான தேயிலை உற்பத்தி செலவின் மூன்று மடங்காகும். அதனால் இரசாயனஉரம் இறக்குமதிக்கான தடை என்ற அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்திருக்கின்றது. அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பாரிய மோசமான பற்றீரியாக்கள் இரண்டு கண்டு படிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59