ஜனாதிபதி கோட்டாபயவோ எமது அரசாங்கமோ கடன் நெருக்கடிகளுக்கு காரணமல்ல - பந்துல

Published By: Digital Desk 3

21 Sep, 2021 | 04:01 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கடன் நெருக்கடிக்கும் வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் போனமைக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக் ஷவோ எமது அரசாங்கமோ காரணமல்ல.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட  தவறான வெளிநாட்டு கொள்கையும் அனர்த்தங்கள், கொவிட் நெருக்கடிகளே காரணம் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடு மிகப்பெரிய வெளிநாட்டு செலாவணி நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்து வருகின்றது. இது வெறுமனே கொவிட் வைரஸ் பரவல் காரணங்களின் தாக்கமாக மட்டும் கூறிவிட முடியாது.

தேயிலை, தென்னை,இறப்பர் ஏற்றுமதிக்கான சர்வதேச சந்தையை தேடியாக வேண்டும். ஆடை உற்பத்தியை மீண்டும் பலப்படுத்த வேண்டும், அவ்வாறான நிலையில் தான் எம்மால் நெருக்கடியை தாண்டி செல்ல முடியும்.

இன்று பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இலங்கையின் இடத்தை பிடித்துள்ளது. அவற்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான நெருக்கடி நிலையில் நாட்டை முடக்கி விமான நிலையங்களை முடக்கி வைத்துள்ளோம்.

அதேபோல் தாக்கு பிடிக்க முடியாத அளவிற்கு அபிவிருத்தி கடன்களை பெற்றுள்ளோம். 2029ஆம் ஆண்டு வரையில் இந்த நெருக்கடிக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24