ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களால் எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

Published By: Robert

18 Dec, 2015 | 10:32 AM
image

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சிரிய கிளர்ச்சியாளர்கள் எதிர்க் கிளர்ச்சிக் குழுவான அல்-–நுஸ்ராவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தென் சிரியாவிலுள்ள அல்-–நுஸ்ரா கிளர்ச்சிக் குழுவின் தலைமையகத்தை தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திக் கைப்பற்றிய யொர்மொக் மட்ரையர்ஸ் கிளர்ச்சிப் படையணியைச் சேர்ந்தவர்கள் தம்மால் பிடிக்கப்பட்ட எதிர்க் கிளர்ச்சியாளர்களுக்கு இவ்வாறு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது அல்-–நுஸ்ரா படையணியைச் சேர்ந்த இரு கிளர்ச்சியாளர்கள் உடல் கட்டப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் முதுகுப் பகுதியை காண்பித்தவாறு மண்டியிட்டு அமர்ந்திருக்கப் பணிக்கப்படுகின்றனர்.அதன்பின் அவர்களது உடல் மீது கொள்கலனொன்றிலிருந்து பெற்றோல் போன்று தென்படும் திரவம் ஊற்றப்படுகிறது.அத்துடன் பிறிதொரு நபரின் உடலின் மீதும் இதே வழிமுறையைப் பின்பற்றி மேற்படி பெற்றோல் போன்று தென்படும் திரவம் ஊற்றப்படுகிறது.அல்- நுஸ்ரா கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் தமது எதிர்க் குழுவைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர்களை தாம் கொன்றுள்ளதாக அறிவித்ததற்கு ஒரு மாதம் கழித்தே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35