“அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெருமளவு குறைவு”

Published By: Digital Desk 2

20 Sep, 2021 | 11:30 AM
image

எம்.மனோசித்ரா

தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் , அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய தொற்றாளர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைவடைந்துள்ளதாக வெளிக்கள நோயாளர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கான காரணி தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைதலில் தடுப்பூசி வழங்கல் முக்கிய பங்கினை வகிக்கிறது. தடுப்பூசி வழங்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் அதிகளவானோர் கொவிட் தொற்றுக்கு உள்ளான போதிலும் , தீவிர நிலைமையை அடைதல் குறைவடைந்துள்ளது.

அத்தோடு தற்போது ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளமையால் ஒட்சிசனுடனான சிகிச்சை படுக்கைகள் போதியளவில் இருப்பில் உள்ளன. கடந்த காலங்களில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட முடியாதளவிற்கு அதிதீவிர சிகிச்சை பிரிவு பற்றாக்குறை காணப்பட்டது.

ஆனால் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் போதியளவு இடம் காணப்படுகிறது. தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளினால் நாம் பெற்றுக் கொண்ட பிரதிபலன் இதுவேயாகும். இதே நிலைமையை தொடர்ந்தும் பேண வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04