நாளாந்தம் 1500 முதல் 2000 ஆயிரம்  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவர் - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 4

19 Sep, 2021 | 06:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிறைவடைந்த  எட்டு மாத காலத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.

இவர்களில் 270 பேர் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி முழுமையாக குணமடைந்துள்ளார்கள். எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள்  நாளாந்தம் 1500 தொடக்கம் 2000 ஆயிரம்  சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள். 

Articles Tagged Under: பிரசன்ன ரணதுங்க | Virakesari.lk

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை துரிதமாக மேம்படுத்தினால் மாத்திரமே பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்ய முடியும். என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவுப் பெற்றவுடன் இலங்கையை சிவப்பு பட்டியலில் உள்ளடக்கி நாடுகளுடன்  தடையை நீக்குமாறு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜேர்மன், கனடா, சீனா , சிங்கப்பூர், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள தடை விதித்துள்ளன.

பிரித்தானியா கடந்த வாரம் இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த மாதங்களில் கொவிட் தாக்கம் தீவிரமடைந்ததால் இந்நாடுகள் இலங்கைக்கு சுற்று பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என தடை விதித்துள்ளன.

 சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார பாதுகாப்பு  அறிவுறுத்தல்களை நடைமுறைக்கு ஏற்றாட் போல் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை ஹோட்டல்  முகாமைத்துவம் பயிற்சி நிறுவகத்தில் இன்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அதிகார சபை அதிகாரிகளுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06