பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பேன் - காமினி லொகுகே

18 Sep, 2021 | 10:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள  குற்றச்சாட்டுக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் ஒன்றினைந்து பதிலளிப்பேன்.இவரது கருத்துக்கள் கவலையளிக்கின்றன என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அமைச்சர்களான சரத் வீரகேகரவும், காமினி லொகுகேவும் ஒன்றினைந்து தனக்கு எதிராக செயற்படுவதாக  ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார  முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கருத்துக்கள் கவலையளிக்கின்றன.இவருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.பொலிஸ் நிலைய பொறுத்திகாரி தொடர்பில் இவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அடிப்படையற்றதாகும்.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் அங்கம் வகிக்கிறேன். அன்று தொடக்கம் இன்று வரை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளேன். இவரை போன்று பலரை அரசியலில் சந்தித்துள்ளேன்.

இவர் ஏன் எம்மீது இந்தளவிற்கு வெறுப்புடன் உள்ளார் என்று தெரியவில்லை.இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுடன் ஒன்றினைந்து பதிலளிப்பேன் என்றார்.

மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேவிற்கு நெருங்கிய ஒருவர் அரசியல் சிபாரிசுடன்  பாதுக்க  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வறான கீழ்த்தரமான  செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் பலமுறை எடுத்துரைத்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை எனவும், அமைச்சர்களான காமினி லொகுகே, சரத் வீரசேகர ஆகியோர் ஒன்றினைத்து தன்னை தாக்குவதால் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் பாதுக்க பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார் இவ்விரு அமைச்சர்கள் மீதும் குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21