கவி மற்றும் கொவெக்ஸுடன் கைகோர்க்கிறது ரோட்டரி கழகம்

Published By: Digital Desk 2

18 Sep, 2021 | 11:09 AM
image

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை சமூகங்களுக்கிடையில் மேலும் விரிவுபடுத்தக்கூடியவகையிலான இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ரோட்டரி பவுன்டேஷன் மற்றும் 'கவி' (தடுப்பூசி தொடர்பான கூட்டிணைவு) ஆகியவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக சர்வதேச ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொவிட் - 19 செயலணியின் தலைவர் கே.ஆர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

'கவி' என்பது உலகளாவிய அரச மற்றும் தனியார் துறைசார் தடுப்பூசி கூட்டிணைவாகும். இது உலகளாவிய ரீதியில் கொவிட் - 19 தடுப்பூசியின் கொடுப்பனவை உறுதிசெய்யும் நோக்கில் இயங்கிவருகின்றது.

 

இலங்கையானது கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் ஊடாக அஸ்ராசெனேகா, பைஸர், மொடேனா தடுப்பூசிகள் உள்ளடங்கலாக மொத்தமாக 3,320,560 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

மேலும் 264,000 அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் இம்மாதமளவில் கிடைக்கப்பெறவுள்ளன. இதன்மூலம் கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் ஊடாக நாட்டின் சனத்தொகையில் 8 சதவீதமானோருக்கான தடுப்பூசி வழங்கலைப் பூர்த்திசெய்யமுடியும். 

போலியோ தடுப்பூசியின் கிடைப்பனவை உறுதிசெய்வதில் ஏற்கனவே ரோட்டரி மற்றும் கவி ஆகியன மிகநெருங்கிச் செயலாற்றியிருந்த நிலையில், தற்போது கொவிட் - 19 தொற்றுப்பரவலை முறியடிப்பதற்கு எதிராகவும் அவை கூட்டிணைந்திருக்கின்றன.

இந்தத் தொற்றுப்பரவலைப் பொறுத்தமட்டில், அனைத்து நாடுகளினதும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரையில் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறமுடியாது.

அதுமாத்திரமன்றி அனைத்து நாடுகளினதும் மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் ஊடாகவே இந்தத் தொற்றுநோயிலிருந்து மீளமுடியும்.

எனவே போலியோ தடுப்பூசியைப் பகிர்வதில் பணியாற்றிய ரோட்டரி கழக உறுப்பினர்களால், அந்த அனுபவத்தை கொவிட் - 19 தடுப்பூசி பகிர்வில் பயன்படுத்தமுடியும் என்பது சாதகமான விடயமாகும்.

இலங்கையில் ரோட்டரி கழகமானது சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றிவருவதுடன் 2 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் அதிக பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59