மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்து சிறுவர்களுக்கும் பைசர் தடுப்பூசிகள்

Published By: Vishnu

18 Sep, 2021 | 08:39 AM
image

15-19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பெற்றோரின் அனுமதியுடன் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (17) காலை நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு விசேட குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின்போது சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து ஜனாதிபதி விசாரித்தார். 

இதன்போது 12-19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்ததை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேலா குணவர்தன ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார்.

மருத்துவ நிபுணரின் மேற்பார்வையின் கீழ் பெற்றோரின் அனுமதியுடன் தொடர்புடைய கிளினிக்குகளில் மட்டும் 12-19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

12-15 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவிடமிருந்து ஜனாதிபதி கேட்டறிந்தார். 

உலகின் பிற பகுதிகள் இன்னும் இந்த திட்டத்தை நோக்கி நகரவில்லை என்றும், தடுப்பூசிகள் தற்போது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவதாகவும் அந்த குழு குறிப்பிட்டது.

அதன்படி 15 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தலை விரைவாக முடிக்கவும், மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி வழங்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

இது தொடர்பில் பெற்றோர்களுக்கு முறையான தெளிவுபடுத்தலின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கியதுடன், நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி அனைத்து சிறுவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46