முதலிரவு அன்று கையடக்கதொலைபேசி மூலம், தனது முதலிரவு காட்சியை படம் பிடிக்க முயன்ற கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என பெண் ஒருவர் கூறியுள்ளார்.

பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்று வருகிறார் மது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடையை முதலிரவு, எலகங்கா என்னும் இடத்தில் தனியார் விடுதி ஒன்றில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மதுவின் கணவர் தங்கள் முதலிரவை தன்னுடைய கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்றுள்ளார். இதற்கு மது மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஒரு நாள் முழுவதும் மதுவுக்கு உணவு ஏதும் வழங்காமல் அறையில் பூட்டி வைத்துள்ளார். இதனையடுத்து தனது தாய் வீட்டிற்கு சென்ற மது தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் மதுவின் கணவர் தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என பொலிஸ் நிலைய ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவரை வரவழைத்த பொலிஸார் எச்சரித்து அனுப்பியது.