ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அதிருப்தி

17 Sep, 2021 | 04:54 PM
image

(நா.தனுஜா)

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கை தொடர்பில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திடம் வாய்மொழிமூலமாகத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து விரைவில் ஆணையாளருக்கு எழுத்துமூலமான கடிதமொன்றை அனுப்பிவைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அன்றைய தினம் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதில் கிளிநொச்சியில் ஆறாவது கிளை அலுவலகத்துடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆணையாளர், அலுவலகத்தின் செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை பேணப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களை முன்நிறுத்திய மனிதாபிமான அணுகுமுறைகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டுக்குக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை வலிந்து காணாமலாக்குவதற்கான முயற்சிகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்த அச்சங்கத்தின் பிரதிநிதிகள், இனியேனும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தம்மீது வலுகட்டாயமாகத் திணிக்கப்படுவதிலிருந்து தம்மை விடுவித்து சர்வதேச விசாரணையுடனான நீதிச்செயன்முறையொன்றைப் பரிந்துரைசெய்வதனூடாகத் தமக்கு நீதியை வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியின் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை திருப்தியளிக்கின்றதா? என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதியொருவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கைகொள்ளமுடியாது என்று ஏற்கனவே நாம் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தோம். அவ்வாறு நாம் கூறுவதற்கான காரணங்களையும் அதற்கான ஆதாரங்களையும் அக்கடிதத்துடன் இணைந்திருந்தோம்.

அவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் கிளையொன்று கிளிநொச்சியிலும் திறக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதன் ஊடாக அவ்வலுவலகத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்து நாம் மிகவும் கவலையடைகின்றோம்' என்று அப்பிரதிநிதி குறிப்பிட்டார்.

அத்தோடு ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கை குறித்த தமது அதிருப்தியை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு வாய்மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதாகக் கூறிய அப்பிரதிநிதி, இதுபற்றி விரைவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுத்துமூலம் கடிதமொன்றை அனுப்பிவைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37