மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவரும் மட்டக்களப்பு ; மக்கள் விசனம்

Published By: Digital Desk 3

17 Sep, 2021 | 01:05 PM
image

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  பள்ளத்துச்சேனை எனும் இடத்தில்  எந்தவித அனுமதியும் இல்லாமல் அதிகளவான மண் அகழப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான மண் அகழ்வு இடம்பெறுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேச மக்கள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இடம்பெயர கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த மண் அனைத்தும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் இதற்கு பின்னால் அரசாங்கம் சார்ந்த அரசியல்வாதிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'இதற்கு யார் அனுமதி வழங்கியது என்பது. இதுவரைக்கும் தெரியாத நிலை காணப்படுவதால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சி.சந்திரகாந்தன் மற்றும் இராஜங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மண் மாபியாக்களின் கூடாராமா மாறிவரும் மட்டக்களப்பு மண் வளத்தை பாதுகாக்க எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இந்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உட்ப்பட மண்வள உத்தியோகத்தர்கள் கவனம் எடுத்து உடனடியாக இதை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:10:33
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51