சாரணர் ஆணையாளர் பதவிக்கான ஜனாதிபதியின் நியமனத்தை சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல்

Published By: Gayathri

16 Sep, 2021 | 03:19 PM
image

(எம்.எப்.எம். பஸீர்)

பிரதான சாரணர் ஆணையாளர் பதவிக்கு ஜனாதிபதியால் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பதவியில் கடமைகளை முன்னெடுப்பதை  தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சாரணர் பேரவையின் உப தலைவர் பீ. மைக்கல்டேமியன் சில்வா உள்ளிட்ட அப்பேரவையின் 11 உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அம்மனுவின் பிரதிவாதிகளாக சாரணர் அமைப்பின் செயலாளர், ஜனாதிபதி செயலர், புதிய சாரணர் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஜனப்ரித் பெர்ணான்டோ மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சாரணர் இயக்கத்தின்  பிரதான ஆணையாளர் பதவிக்கு  ஒருவரை நியமிக்கும்போது ஜனாதிபதி, சாரணர் இயக்கத்தின்  4 ஆவது சட்ட ஏற்பாட்டுக்கு அமைய தமது குழுவின் பரிந்துரைகளைப் பெற்று அதன் பிரகாரம்  நியமனம் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, குறித்த பதவிக்கு தாம் அளித்த பரிந்துரையில்  ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரான சந்ரா வாகிஷ்டவை  நியமிக்குமாறு கோரியதாகவும், எனினும் அதனை கணக்கில் கொள்ளாது  தாங்கள் குழுவின் பிரதி ஆணையாளராக கடமையாற்றிய  சட்டத்தரணி  ஜனப்பிரித் பெர்ணான்டோவை  நியமித்தமை சாரணர் இயக்க சட்ட திட்டங்களுக்கு முரணானது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான  நியமனங்களை முன்னெடுக்க ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என குறிப்பிடும் மனுதாரர்கள், அதனால் இங்கு அடிப்படை உரிமை மீறல் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு கோரியுள்ளனர்.

அதனால் தற்போது சாரணர் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்ணான்டோவை அப்பதவியில் செயற்பட தடை விதித்தும், சந்ரா வாகிஷ்டவை அப்பதவியில் நியமிக்க உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பிரதிவாதிகளிடமிருந்து ஒரு கோடி ரூபாவை நட்ட ஈடாக வழங்க உத்தரவிடவேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17