வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் பொருட்களுக்கு வரைறையில்லை- நிதி அமைச்சின் செயலாளர் 

Published By: Digital Desk 4

16 Sep, 2021 | 03:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும்போது அவர்களின் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டுவரும் உபகரணங்களுக்கு புதிதாக வரையறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார். 

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கீழ் பொருளாதாரம் மீட்சியடையும் -  திறைசேரியின் செயலாளர் | Virakesari.lk

இலங்கை மத்திய வங்கியினால் 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் வரையறை வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருபவர்கள் கொண்டுவரும் பொருட்களும் உள்ளடக்குவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில்  குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்து  வருபவர்கள் நாட்டுக்கு கொண்டுவரும் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் அல்லாமல் புதிதாக வேறு எந்த வரையறையும் விதிக்கப்படவில்லை. 

மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைக்கும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் நாட்டுக்குவரும்போது கொண்டுவரும் பொருட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அத்துடன் மத்திய வங்கியினால் 623 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனை, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரமாகும்.

நாட்டுக்குள் இருக்கும் அன்னிய செலாவணியை தடுத்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். அதனால் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும்போது எமது பாவனைக்காக கொண்டுவரும் இனிப்பு பொருட்கள் மற்றும் இலத்திரணியல் பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடு பாதிக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43