சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா - பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்

Published By: Vishnu

16 Sep, 2021 | 10:00 AM
image

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதன்கிழமை ஒரு புதிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.

President Biden delivers remark on National Security at the White House
 - Sputnik International, 1920, 15.09.2021

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் சக்தி மற்றும் இராணுவ இருப்பு குறித்து மேற்கண்ட மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந் நிலையில் சீனாவை எதிர்கொள்ளும் புதிய முயற்சியாக இந்த ஒப்பந்தம் வெளிவந்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட கூட்டாண்மை கீழ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அணுவாயுதத்தால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவதற்கான தொழில்நுட்பத்தையும் திறனையும் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கும்.

ஆக்கஸ் (Aukus) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

ஜோ பிடன், போரிஸ் ‍ஜோன்சன் மற்றும் ஸ்காட் மோரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்று பெயரிடப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடங்குவது குறித்து ஒரு கூட்டு அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டனர்.

அதில் அவர்கள், "இந்த ஒப்பந்தம் இந்தோ-பசிபிக்கி பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் எங்கள் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும்" என்று கூறினர்.

புதிய ஒப்பந்தத்தின் விளைவாக பிரான்ஸ் வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்தது.

2016 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் 50 பில்லியன் அமெரிக்க டொலர் (€ 31bn; £ 27bn) பெறுமதியான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17