திருத்­தப்­பட்ட வற் வரியை 15 வீத­மாக அதி­க­ரிப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்­திற்கு அமைச்ச ரவை அங்­கீ­காரம் கிடைத்தி­ருக்­கி­றது. அதன்­படி இந்த சட்­ட­மூலம் இன்று நள்­ளி­ரவு (நேற்றுநள்­ளி­ரவு) வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும். அதன்­பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் முத­லா­வது இரண்­டா­வது வாசிப்­புக்­களின் பின்னர் நிறை­வேற்­றப்­பட்ட தினத்­ தி­லி­ருந்து 15 வீத வற் வரி அமு­லுக்கு வரும் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­

ரு­மான ராஜிதசேனா­ரத்ன தெரி­வித்தார்.

வற் வரி அதி­க­ரிப்­பா­னது தற்­கா­லி­க­மா­கவே செய்­யப்­பட்­டுள்­ளது. வெளி­நாட்டு கடன்­களை செலுத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு அவ­ச­ர­மாக நிதி தேவைப்­ப­டு­கி­றது. அத­னால்தான் அவ­ச­ர­மாக வற் வரி சட்­டத்தை நிறை­வேற்­று­கிறோம். எமக்குத் தேவை­யான நிதி கிடைத்­ததும் வற் வரி அதி­க­ரிப்பை குறைத்­து­வி­டுவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:

அர­சாங்­கத்­துக்கு தேவை­யான நிதி கிடைத்­ததும் வற்­வரி வீதத்தை குறைக்க முடியும். நிதி அமைச்­சினால் செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட வற் வரி அதி­க­ரிப்பு திருத்தச் சட்­ட­மூ­லத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­தது. உட­ன­டி­யாக இதனை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டவும் அதன்­பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் முதலாம், இரண்டாம் வாசிப்­புக்­க­ளுக்கு உட்­ப­டுத்தி நிறை­வேற்­றவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட சந்­தர்ப்­பத்­தி­லி­ருந்து வற்­வரி அமு­லுக்கு வரும். சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் வற் வரி வீத­மா­னது 15 வீத­மாக கொள்­ளப்­படும். சில்­லறை விற்­ப­னையின் போது வரு­ட­மொன்­றுக்கு 50 மில்­லியன், அல்­லது 3 மாதங்­க­ளுக்கு 12.5 மில்­லியன் ரூபா­விற்கு அதிகம் வரு­மானம் ஈட்­டு­ப­வர்கள் வற்­வரி அற­வீட்­டுக்கு உட்­ப­டு­வார்கள்.

அதே­போன்று சுகா­தாரத் துறையில் நோய்­ம­திப்­பீட்டு பரி­சோ­தனை (diagnostic tests) மற்றும் இரத்­த­மாற்று சிகிச்சை (dialysis) ஆகி­ய­வற்­றுக்கும் மருத்­துவ ஆலோ­சனை சேவைக்கும் வெளி­நோ­யாளர் பிரிவு சேவைக்கும் வற்­வரி அமு­லுக்கு வராது.

ஏனைய தனியார் சுகா­தார சேவைக்கு வற்­வரி அமு­லுக்கு வரும். அத்­துடன் தொலைத்­தொ­டர்­பு­சேவை, புகை­யிலை உற்­பத்­திகள், சீனி மற்றும் ஏனைய இனிப்­புக்கள் சேர்க்­கப்­பட்ட பால்மா போன்­ற­வற்­றுக்கு வற்­வரி அமுல்­ப­டுத்­தப்­படும். இலங்கை விமான நிலை­யத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு வெளி­யி­லுள்ள மற்­று­மொரு விமான நிலை­யத்­திற்குப் பய­ணிக்கும் போது பய­ணி­க­ளி­ட­மி­ருந்து வற்­வரி அற­வி­டப்­படும்.

அந்­த­வ­கையில் வற் வரி சட்­ட­மூ­லத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது. தற்­போது அதனை வர்த்­த­மா­னியில் வெளி­யிட்டு பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு வாரம் அளவில் நிறை­வேற்­றுவோம். அதன்­பின்னர் இந்த சட்­ட­மூலம் அமு­லுக்கு வரும்.

கேள்வி:- தொலை­பேசி நிறு­வ­னங்கள் ஏற்­க­னவே 25க்கும் மேற்­பட்ட வீதத்தல் வற் வரியை அற­வி­டு­கின்­றன. தற்­போது மேலும் 15 வீதத்தை அற­வி­டு­வதன் மூலம் கிட்­டத்­தட்ட 40 வீதத்­திற்கும் மேற்­பட்ட வரி பய­னா­ளி­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­ப­டு­கின்­றது. இது அநீ­தி­யல்­லவா?

பதில்:- நாங்கள் வறிச்­ச­லுகை கொடுப்­ப­தற்கு முடி­யு­மான சேவை­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கின்றோம். ஆனால் தொலை­பேசி அதி­க­மானோர் பயன்­ப­டுத்­து­கின்­றனர். எனவே அதன்­மீது வரி அற­வி­டு­வது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது. இலங்­கையில் 20 மில்­லியன் மக்­களே உள்­ளனர். 21 மில்­லியன் தொலை­பே­சிகள் பாவ­னையில் உள்­ளன.

கேள்வி:- இதன் மூலம் தொலை­பேசி பாவ­னை­யா­னது ஒரு அத்­தி­யா­வ­சிய சேவை­யாக மாறி­யுள்­ளதே?

பதில்:- அவ்­வாறு மாறி­யி­ருந்­தாலும் அதன்­மீது வரி அற­வி­டு­வ­தா­னது பாரிய அளவில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது. இதனை ஒரு பெரிய அநீதி என்று கூற முடி­யாது.

கேள்வி:- வெளி­நோ­யாளர் பிரி­வுக்கு வற் வரி இல்­லை­யென்று கூறு­கின்­றீர்கள். அது எவ்­வாறு என விளக்க முடி­யுமா?

பதில்:- அதா­வது வெளி­நோ­யாளர் பிரிவில் எழு­திக்­கொ­டுக்­கப்­படும் மருந்­து­க­ளுக்கும் சிபார்சு செய்­யப்­படும் பரி­சோ­த­னை­க­ளுக்கும் வற் வரி அற­விட முடி­யாது.

கேள்வி:- புறக்­கோட்டை வர்த்­த­கர்கள் வற் வரியை எதிர்த்து ஆர்ப்­பாட்டம் செய்­தி­ருந்­தனர். அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னீர்­களா?

பதில்:- அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திதான் புதிய சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. சில்­லறை விற்­ப­னையின் வரு­மான எல்லை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. உண்­மையில் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்­க­ளுக்கு நல்­லது நடந்­துள்­ளது என்று கூறலாம்.

கேள்வி:- ஆரம்­பத்தில் சுதந்­தி­ரக்­கட்சி வற் வரி அதி­க­ரிப்பை எதிர்த்­தது. தற்­போது என்ன நடந்­தது?

பதில்:- பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்கம் காணப்­பட்­டது அத­னூ­டா­கவே வரு­மான எல்லை அதி­க­ரிக்­கப்­பட்­டது.

கேள்வி:- வற்­வ­ரியை ஏன் அதி­க­ரிக்­க­வேண்டும். ?

பதில்:- கடன் சுமையை தாங்க முடி­ய­வில்­லையே ஆனால் இது தற்­கா­லி­க­மா­னது.

கேள்வி:- நவம்பர் 10 ஆம் திகதி அடுத்­த­வ­ரு­டத்­திற்­கான அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்டம் வர­வுள்­ளது. அதற்கு இன்னும் சிறிய காலமே உள்­ளது. அத­னுடன் சேர்த்து வற் வரி அதி­க­ரிப்பை கொண்­டு­வந்­தி­ருக்­க­லாமே?

பதில்:- ஆனால் எமக்கு காசு அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­கி­றதே.

கேள்வி:- புகை­யி­லைக்­கான வரியை 20 வீதத்தால் அதி­க­ரிக்­கு­மாறு கூட்டு எதி­ர­ணியின் பந்­துல குண­வர்த்­தன எம்.பி. கூறி­யுள்­ளாரே?

பதில்:- அதற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம்.

கேள்வி. ஏன் தாமதம்

பதில்:- பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறோம்

கேள்வி:- இவ்­வா­றான நட­வ­டிக்­கையால் புகை­யிலைத் தொழில்­துறை இல்­லாமல் போய்­வி­டுமா?

பதில்:- இல்­லாமல் போனால் பர­வா­யில்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே நாங்கள் இருக்­கின்றோம். இந்த விட­யத்தில் எனக்கு எதி­ராக ஒரு சில அமைப்­புக்கள் பிர­சாரம் செய்­கின்­றன. புகை­யிலை தொழில்­துறை, மருந்து கம்­ப­னிகள், தனியார் மருத்துவ நிறுவனங்கள் எனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன. ஆனால் நான் அவற்றைக் கண்டு தளர்வடைய மாட்டேன். விரைவாக அந்த சட்டமூலங்களை கொண்டுவருவேன்.

கேள்வி:- இதனால் அரசாங்கத்திற்கான வருமானம் குறையுமே?

பதில்:- வருமானம் குறைவு என்பதைவிடவும் உயிரிழப்பை தடுப்பது முக்கியத்துமிக்கது. விபசாரம் செய்தாலும் வருமானம் கிடைக்கும். ஆனால் அதற்கான விபசாரம் செய்ய முடியாதே. எனவே வருமானம் பெறவேண்டும் என்பதற்காக எதனையும் செய்ய முடியாது.

கேள்வி:- எப்போது இருந்து வற் வரி அமுலுக்கு வரும்?

பதில்:- வர்த்தமானியில் சட்டமூலம் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் சட்டமூலம் அமுலுக்கு வரும்.