ரணில் உள்ளிட்ட சிலருக்கு இடைக்கால தடை உத்தரவு 

Published By: Digital Desk 4

15 Sep, 2021 | 08:06 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றை பிரதிநிதித்துவம் செய்த, ஐக்கிய தேசிய கட்சியின் 21 உறுப்பினர்களை அக் கட்சியிலிருந்து வெளியேற்றியதன் ஊடாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்காக, வேறு நபர்களை பெயரிடுவதை தடுத்து, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம்   இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது.

வெளியேற்றப்பட்ட  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 21 பேர் தாக்கல் செய்த  முறைப்பாடுகளை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிவான்  அருண அளுத்கே, எதிர்வரும் 29 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் வண்ணம் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

 பத்தேகம பிரதேச சபையின் உறுப்பினர்களாக கடமையாற்றிய  மஞ்சுள வசந்த, பி.எச். லியனகே, கொழும்பு மா நகர சபையின் உறுப்பினர்  கமச்சிகே விஜேதாச உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களை சேர்ந்த 21 பேர் இந்த முறைப்பாடுகளை தாக்கல் செய்திருந்தனர்.

 குறித்த முறைப்பாடுகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலர் பாலித்த ரங்கே பண்டார, அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அக்கட்சியின் ஒழுக்காற்றுக் குழு செயலர் சமிந்த ஜயசேகர ஆகியோருக்கே இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,  அடுத்த தவணையின் போது அவர்களை மன்றில் விளக்கமளிக்கவும் அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

 முறைப்பாட்டாளர்கள் சார்பில் இன்று ஜனாதிபதி சட்டத்தரணி  பர்மான் காசிம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி  திசத் விஜேகுணவ்ர்தன ஆகியோர் மன்றில் அஜராகி வாதங்களை முன் வைத்திருந்தனர்.

கடந்த  தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததாக குற்றம் சாட்டி, ஐ.தே.க. உறுப்புறுமையிலிருந்து  முறைப்பாட்டாளர்கள் 21 பேரையும் நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற முன்னர், அவர்களுக்கு நியாயமான ஒழுக்காற்று விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்கக் கூட சந்தர்ப்பம் அளிகப்படவில்லை எனவும்,  அதனூடாக இயற்கை நீதிக் கோட்பாடு மற்றும் நியாயத்தை நிலை நிறுத்துவதற்கான சித்தார்த்தங்கள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகவும்  ஜனாதிபதி சட்டத்தரணிகளான பர்மான் காசிம் மற்றும் திசத் விஜேகுணவர்தன ஆகியோர் மன்றில் சுட்டிக்காட்டினர்.

 இந் நிலையிலேயே முன் வைக்கப்பட்ட விடயங்களை அராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிவன் அருண அளுத்கே, 21 உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றியதன் ஊடாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க, இந்த இடைக்கால தடை உத்தரவி பிறப்பித்து வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44