தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாகன விபத்துக்களில் 66 பேர் மரணம்

Published By: Digital Desk 3

16 Sep, 2021 | 10:56 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில்  பதிவான வாகன விபத்துக்களில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆகஸ்ட் 20 ஆம் திகதி  முதல் செப்டம்பர் 13 ஆம் திகதி வரையிலான 3 வாரங்களில் மட்டும் பதிவான 63 விபத்து சம்பவங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

இந்த விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்கள் காரணமாக பதிவான விபத்துக்கள் என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, அவ்வாறான விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.

மொத்த விபத்துக்களில் 56 விபத்துக்கள் சாரதிகள், செலுத்துநர்களின் கவனயீனம் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், ஒரே ஒரு விபத்து மட்டுமே தொழில் நுட்ப கோளாரினால் பதிவானது எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

இந்நிலையில் கவனயீனமாக வாகன செலுத்தல் மற்றும் அதிக வேகம் ஆகியன விபத்துக்களுக்கு பிரதான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38