தேசத்தின் ஒரே ஒரு இளைஞர் ஆளுமை விருத்தி மென்திறன் கல்லூரி தேசிய இளைஞர் படையணி

Published By: Digital Desk 2

14 Sep, 2021 | 05:31 PM
image

இளம் தலைமுறையினர் நாட்டின் உயிர் நாடியை போன்றவர்கள். நாடொன்றின் பொறுப்பை ஏற்க இருக்கின்ற இளம் தலைமுறையினர் வழிதவறிச் சென்றால் ஏற்படும் விபத்தை  தனியாகக் கூற வேண்டியதில்லை. இளைஞர் என்பவனை துறவியைப் போன்ற பிரஜை என்று நான் வரைவிலக்கணம் கூற முடியாது. துடிப்புள்ள துணிச்சல் மிக்க இளைஞர்கள் நாட்டிற்கு வளங்கள் ஆவர். 

புதியதை தேடுகின்ற, புத்தாக்கம் செய்கின்ற மதிநுட்பத்துடன் செயற்படுகின்ற இளம் தலைமுறையினர் ஒரு நாட்டிற்கு இருந்தால் அது அந்த நாட்டின் அதிஷ்டம் ஆகும். ஆனால் தற்சமயம் எமது நாட்டில் இளைஞர்கள் மூலம் நாட்டிற்கு சரியான வேலை எடுக்கப்படுகின்றதா, அவர்கள் பயனுள்ள வகையில் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பங்களிப்பு செய்கின்றார்களா என்ற கேள்வி எம் முன்னே காணப்படுகின்றது.

ஒழுக்கம் , தலைமைத்துவம், ஆளுமை விருத்தி என்ற மூன்று தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்ற தேசிய இளைஞர் படையணி ஏனைய அனைத்து இளைஞர் வலுவூட்டல்களையும் தாண்டி, சவால்களுக்கே சவால் விடுக்க கூடிய ஆளுமையுடைய பலம் வாய்ந்த இளைஞர் படை ஒன்றை கட்டி எழுப்புவதற்காக தெளிவானதும், முறையானதும் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எந்த ஒருவரும் தமது வாழ்க்கையில் தமது இருப்பை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் மூலம் குழு மற்றும் உப கலாச்சாரங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இளைஞர்களுள் எதிர்காலம் பற்றிய உதாசீன தன்மை  இயல்பாக காணப்படுவதாக சமூக மானிட விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

இளைஞர்களில் காணப்படக்கூடிய இந்த மந்தத்தன்மையான சிந்தனையை மாற்றுவதற்கும் அவர்களுள் காணப்படும் இயல்பான திறன்களை விருத்தி செய்து சமூக மயப்படுத்துவதற்கும் தேசிய இளைஞர் படையணி மூலம் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பதட்டத்தன்மை , எதிர்பார்ப்பின்மை, வேலை வாய்ப்பின்மை காரணமாக ஏற்படும் மன உளைச்சல் , ஒழுக்க நெறியின்மை, சொகுசான  வாழ்க்கையை அனுபவிக்க காணப்படுகின்ற விருப்பம் போன்றன இளைஞர்களின் குணாதிசயங்கள் ஆகும். ஆனால் இந்த கருத்துக்கள் அனைத்தையும் கடந்து சென்று ஒழுக்கத்துடன் சமூக மயப்படுத்த ஆயத்தமாகின்ற இளைஞர்களுள் கட்டாயம்  காணப்பட  வேண்டியதாகும்.

தேசிய இளைஞர் படையணியில் காணப்படுகின்ற விசேடமான இலக்கு ஒழுக்கத்தை கட்டி எழுப்புவதாகவும். உயர்ந்த பிரஜைகளின் குணாதிசயங்களை மேம்படுத்தக்கூடிய தேசிய இளைஞர் படையணி தேசிய கீதத்திற்கு, தேசியக்கொடியிற்கு மாத்திரம் அல்லாது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் கவனம் செலுத்தி மென் திறன்களை மேம்படுத்துகின்ற செயற்பாடுகளை தமது பயிற்சி நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கி இருப்பது கட்டுப்பாட்டுடன் எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்பவர்களின்  அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆகும்.

நாட்டின் நாலா புறங்களிலும் இருந்து ஒன்றிணையும் இளைஞர் யுவதிகளை அடிமட்டத்தில் இருந்தே நிலையான பெருமைமிகு அறிவை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை ஆரோக்கியமான நல்ல பாதையில் இட்டுச் செல்வதற்கு தேசிய இளைஞர் படையணி வலையமைப்பின் 800 குறைவற்ற தகுதியுடைய ஆலோசகர் குழுவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். முறையான பாடத் திட்டத்திற்கமைய தயாரிக்கப்பட்ட கோட்பாட்டு ரீதியான மற்றும் பிரயோக ரீதியான படைப்பாற்றலுடன் மேற்கொள்ளப்படுகின்ற பயிற்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி 58  பயிற்சி நிலையங்களுக்கு மேலதிகமாக ,  தம்புள்ளை ஹோட்டல் பயிற்சி பாடசாலை, வணிக செயன்முறை வெளிக்களப்படுத்தல் நிறுவனம் (IBPO)  மற்றும் நாவுலை வெளிக்கள பயிற்சி நிலையம் இளைஞர் யுவதிகளுக்காக தாபிக்கப்பட்டுள்ளன. 

இந்த அனைத்து பாட  நெறிகளையும் இலவசமாக கற்க வாய்ப்பு கிடைப்பதுடன் ,   அடிப்படை பயிற்சியின் பின்னர் அவர்கள் தெரிவு செய்கின்ற தொழிற் பயிற்சி பாடநெறி ஒன்றிற்கு முழுமையான புலமைப்பரிசில் பயிலுனர்களுக்கு வழங்கப்படுவதுடன், பயிற்சிக் காலத்தில் மொழி அறிவை மேம்படுத்திக் கொள்ள விசேடமான வரப்பிரசாதங்களும் கிடைக்கும்.

தேசிய இளைஞர் படையணி பாடநெறியுடன் இணையும் இளைஞர் யுவதிகள் தமது பயிற்சி காலத்தினுள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற SIBA (Sri Lanka International Buddhist Academy) நிறுவனம் மூலம் வழங்கப்படுகின்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக்காக உயர் சான்றிதழ் பத்திரம் பெறுவதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றமை இளைஞர் யுவதிகள் பெரும் விசேட பெறுமானம் ஆகும். அதேபோன்று இந்த காலத்தினுள் மொழி அறிவை பெற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

நாட்டின் எதிர்காலம் மற்றும் உந்துசக்தியாக அமைவது இளைஞர்கள் என்பதையும், நாட்டை மாற்றுவதற்கு அதிக ஆற்றல் பெற்றவர்கள் இளைஞர்கள் என்பதனையும் தற்போதைய ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நோக்கு ஆகும். பல்வேறு அமைச்சுகளின் கீழ் காணப்பட்ட தேசிய இளைஞர் படையணி தற்சமயம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது.

 இளைஞர்கள் பலம் வாய்ந்த மற்றும் சமகால உற்சாகத்துடன் இருப்பது தற்காலத்தை விடவும் எதிர்காலத்தில் வெற்றிகரமாக இருப்பதற்கும், தமது பணியை நவீனத் தன்மையுடன் மேற்கொள்ளுகின்ற தற்போதைய தவிசாளர் கர்ணல் தர்ஷன ரத்னாயக்க அவர்களின் தூர நோக்குடைய வழிகாட்டுதலின் கீழ் அனைத்து பணியாளர்களும் இளைஞர் யுவதிகளின் ஆளுமையை, ஒழுக்கத்தை, தலைமைத்துவம் மற்றும் ஆற்றல்களை வலுவூட்டுவதற்காக மகத்தான பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இழந்த அனேகமான விடயங்களை மீள உயிர்ப்பித்து நாட்டை  அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்லும் தேசிய பணியில் முதலிடத்தை வகித்து செயற்படும் தேசிய இளைஞர் படையணி படையினர் இளைஞர் படையணி எதிர்கால பயணத்தில் நிலைபேறான தன்மையை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது வருட இறுதியில் இடம் பெறுகின்ற பௌருஷாபிமாணி மதிப்பீட்டு விழா, தேசிய கலை விழா, தேசிய விளையாட்டு விழா, போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம், சிவில் சட்டம், சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம், சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், கட்டுரை, விவாதம் மற்றும் பொது அறிவுப் போட்டி, தொற்றாத நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பற்றிய தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம், சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டமாக ஓகிட் மலர் பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம் போன்ற அர்த்தமுள்ள பல நிகழ்ச்சித்திட்டங்கள் பயிற்சிபெறும் இளைஞர் யுவதிகளை சமூக மயப்படுத்த தேவையான அறிவு வழங்கப்படும். அதேபோன்று ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து புனர்வாழ்வு செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு ஆளுமை விருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், தேசிய நிகழ்ச்சித்திட்டமான பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், மாணவர் தலைவர் நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றன மேற்கொள்ளப்படும்.

இலக்குகளை  நிறுவுவது மட்டுமன்றி , அந்த இலக்குகளை வெற்றி கொள்வதும் தேசிய இளைஞர் படையணியிடம் காணப்படும் வெற்றியாகும். தாம் எதிர்நோக்கும் அனைத்து இலக்குகளையும் சவால்களாக கருதி அந்த சவால்களுக்கு பதிலாக சவால்களை யே விடுக்க கூடியதாக தேசிய இளைஞர் படையணி வலுவூட்டப்பட்டுள்ளது. புதிய திரும்பல் புள்ளிகளை அமைத்து, பல்வேறு தடைகளை வெற்றி கொண்டு, புதிய பாதைகளை அமைத்து கொண்டு முன்னே செல்லக் கூடிய தேசிய இளைஞர் படையணி அண்மைய காலத்திலேயே  இளைஞர்களுக்கான ஒரே ஒரு ஆளுமை விருத்தி பயிற்சி 'தேசிய நிறுவனம்' ஆக அமையுமிடத்து இளைஞர்களான நீங்களும் அதில் பெருமைக்குரிய பங்காளிகளாக சிறந்த நாட்டை உருவாக்கி எதிர்கால தலைமுறையினருக்கு வழங்கும் செயற்பாட்டில்  ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

தேசத்திடம் காணப்படும்  சிறந்த வளமாக கருதப்படும் நாட்டின் பிள்ளைகளின் பொறுப்புக்களை தோளில் சுமந்து தேசத்தின் முன்னிலையில் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியான முறையில் மேற்கொள்வதாக உறுதியுரை வழங்கும் தேசிய இளைஞர் படையணி தேசத்தின் மென்திறன் கல்லூரியாக அமைந்து ஒட்டுமொத்த இளைஞர்களதும் 'தாய் வீடாக' அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58