கப்ரால் நாட்டுமக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் விஜேவர்தன

Published By: Digital Desk 4

14 Sep, 2021 | 05:09 PM
image

(நா.தனுஜா)

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத உத்தரவாதத்தொகையை அறவிடும் தீர்மானத்தை உடனடியாக நீக்கிக்கொள்வதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருப்பதாகவும் அஜித் நிவாட் கப்ரால் நாட்டுமக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஆற்றுகின்ற முதலாவது உரையில் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

Don't underestimate Moody's warning” | Sunday Observer

அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக இன்றைய தினம் பதவியேற்றுக்கொள்ளவிருக்கும் நிலையில், 'அட்வொகாடா' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் இதுகுறித்துக் கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதில் அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுக்கொள்ளவிருக்கும் அஜித் நிவாட் கப்ராலுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நான் அவருடன் சுமார் 3 வருடங்கள் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அவர் ஓர் சிறந்த நிர்வாகியாவார்.

அதேபோன்று அவர் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்கூடியவகையில் செயலாற்றுகின்ற மனிதராவார். அதனால் அவர் அதிக ஆற்றலைக்கொண்டவர் என்பதை நான் அறிவேன்.

எனவே அவருக்கு இரண்டு அறிவுறுத்தல்களை வழங்குகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டவுடன் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மனால் மேற்கொள்ளப்பட்ட இருதீர்மானங்களை மாற்றியமைக்கவேண்டும்.

அமெரிக்க டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதியை 203 ரூபா என்ற மட்டத்தில் பேணல் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத உத்தரவாதத்தொகையை அறவிடல் என்பவையே அவ்விரு தீர்மானங்களாகும். 

ஏனெனில் ஏற்கனவே நாட்டிற்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்த பலர், அவற்றைப் பதுக்கிவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இறக்குமதி உத்தரவாதத்தொகை குறித்த அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே பொருட்களை இறக்குமதி செய்தவர்கள் பெருமளவான வருமானத்தை உழைப்பதற்கு வாய்ப்பளிக்கும்.

எனவே பதவியேற்றுக்கொண்டவுடன் ஆற்றுகின்ற முதலாவது உரையிலேயே இவ்விரு தீர்மானங்களையும் நீக்கிக்கொள்வதாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இரண்டாவது அறிவுறுத்தல் என்னவென்றால், அவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின்  மத்தியவங்கியில் ஆளுநர் பதவியை வகிக்கவில்லை.

மாறாக இலங்கை மக்களுக்குச் சொந்தமான மத்தியவங்கியிலேயே ஆளுநர் பதவியை வகிக்கின்றார் என்பதை மனதிலிருத்திச் செயற்படவேண்டும். எனவே இலங்கை மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியின் ஆளுநர் என்றவகையில் அவர் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்படவேண்டும், எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34