41 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்

Published By: Priyatharshan

18 Dec, 2015 | 09:47 AM
image

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ரவின் பணிப்­பு­ரைக்கு அமைய புதிய இலச்­சினை, புதிய கருப் ­பொ­ரு­ளு­ட­னான விளை­யாட்டு கீதம் ஆகி­ய­வற்­றுடன் 41ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் கடைசி அம்­ச­மான மெய்­வல்­லுநர் போட்­டிகள் திய­கம, மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்­ப­மா­கியது.

இந்த வருடம் புதுப்­பொ­லி­வு­டனும் நவீன வசதி­க­ளு­டனும் மெய்­வல்­லுநர் போட்­டி­களை நடத்­து­வ­தற்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சும் விளை­யாட்­டுத்­துறை அபி­விருத்தி திணைக்­க­ளமும் ஏற்­பா­டுகளை செய்­துள்­ளன.

9 மாகா ­ணங்­க­ளையும் சேர்ந்த 800 க்கும் மேற்­பட்ட மெய்­வல்­லுநர்கள் தங்­க­ளது ஆற்­றல்­களை இன்­று­முதல் ஞாயி­று­வரை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

இது­வரை நடந்து முடிந்­துள்ள விளை­யாட்டுப் போட்­டி­களில் வட மாகா­ணத்தைத் தவிர்ந்த ஏனைய சகல மாகா­ணங்­ களும் தங்கப் பதக்­கங்­களை வென்­றுள்­ளன.

மெய்­வல்­லுநர் போட்­டி­களில் வட மாகாணம் தங்கப் பதக்­கங்­களை சுவீ­க­ரிக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. போட்­டிகள் இன்று காலை ஆரம்­பிக்­கின்­ற­போ­திலும் உத்­தி­யோ­க­பூர்வ ஆரம்ப விழா இன்று பிற்­பகல் 3.30 மணிக்கு தொடங்­க­வுள்­ளது.

விளை­யாட்டு தீபம் முன்னாள் தேசிய மெய்­வல்­லு­நர்­க­ளான எம். பி. பீ. நயா­ன­னந்த, ஜய­மினி இலே­பெ­ரும ஆகி­யோரால் ஏற்­றி­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிகழ்ச்­சி­களில் முதல் மூன்று இடங்­களைப் பெறு­ப­வர்­க­ளுக்கு முறையே 7,500 ரூபா, 5,000 ரூபா, 3,000 ரூபா வீதம் வழங்­கப்­படும். இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் பிரகாரம் மேல் மாகாணம் 67 தங்கம், 56 வெள்ளி, 40 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35