மேல் நீதிமன்றின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ; பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்

Published By: Vishnu

14 Sep, 2021 | 02:11 PM
image

மெனராகலை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸா­நா­யக்­கவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2018 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுன பெரமுனவின் சார்பில் டி.எம். ஹர்ஷக பிரியா திசாநாயக்க மொனராகலை பிரதேச சபையொன்றின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத் தேர்தலில் அவர் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கியமை நிரூபிக்கப்பட்டதை அடுத்தே ஹர்ஷக பிரியா திசாநாயக்க பதவியிலிருந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளுக்கு பணம் வழங்குதல், உலர் உணவுகள் விநியோகித்தல் மற்றும் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்கியதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வனசிங்க முதியன்செலகே சாந்தவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸா­நா­யக்­கவின் உத்தரவினை மேல்முறையீடு செய்வதற்கு ஹர்ஷக பிரியா திசாநாயக்கவுக்கு ஆறு வாரகால அவகாசம் உள்ளது.

அவர் மேன்முறையீடு செய்யத் தவறினால் அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

இந் நிலையில் நீதிமன்றின் இந்த உத்தரவினை சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) பாராட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34