சீன இராணுவத்தின் ட்ரோன்களினால் ஆபத்தில் பிராந்திய ஸ்தீரத்தன்மை

Published By: Gayathri

14 Sep, 2021 | 03:30 PM
image

(சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்)

சீனாவின் வளர்ந்து வரும் ஆளில்லா விமான திறன்கள் மற்றும் அதிநவீன இராணுவ ட்ரோன்களில் கவனம் செலுத்துதல் என்பன  அண்டை நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன்,  பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் ஜப்பானுக்கு அருகில் மூன்று சீன இராணுவ ட்ரோன்கள் காணப்பட்டன.  

ட்ரோன்களுடன் ஷான்ஸி ஒய் -8 கியூ கடல் ரோந்து விமானம் மற்றும் ஷான்சி ஒய் -9 ஜேபி மின்னணு நுண்ணறிவு விமானம் ஆகியவையே அங்கு காணப்பட்டதாக  ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்தப் பிராந்தியத்தில் ட்ரோன்களை நிறுத்தும் ஒரே நாடு சீனா அல்ல. மே மாதத்தில், இரண்டு எம்கியூ- 4சி ட்ரைடன் ட்ரோன்களை குவாமில் இருந்து வடக்கு ஜப்பானில் உள்ள மிசாவா தளத்திற்கு அமெரிக்கா தற்காலிகமாக மாற்றியது. 

மேலும், ஆகஸ்ட் மாத இறுதியில் சர்வதேச ஊடகங்களின் தகவல்களின் படி , டோக்கியோ அதன் கடலோர காவல்படையில் ட்ரோன்களைச் சேர்க்க முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுப்புறம் ட்ரோன் எதிர்ப்பு தாக்கதல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிககைளை ஜப்பான் அண்மையில் ஆரம்பித்தது. 

இந்தத் தாக்குதல் கட்டமைப்பானது 2025க்குள் நிறைவு செய்யப்பட உள்ளதுடன் லேசர் தொழில்நுட்பத்துடன் தாக்கதல் நடத்த கூடியதாகவே காணப்படும்.

இவ்வாறு ட்ரோன் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதானது சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் அதிக நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

சீனாவின் நெகிழ்வுத்தன்மை, குறைந்த அபாயங்கள் மற்றும் சாத்தியமான அரசியல் மற்றும் இராணுவ நன்மைகள் காரணமாக எதிர்காலத்தில் சீனா ஆளில்லா விமானங்களை அனுப்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு நிபுணரான திமோதி ஹீத் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் இழப்பு ஒரு நெருக்கடியைத் தூண்டும் பகுதிகளில் ட்ரோன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

உதாரணமாக, தாய்வான், ஜப்பான் அல்லது தென் சீனக் கடலில் வான்வெளியில் தாக்குதல்களுக்கு செல்லும் போது விமானியின் மரணம் ஒரு நெருக்கடியை உருவாக்கும். இவ்வாறான தருணங்களில் ட்ரோன்கள் மிகவும் பயனுள்ளதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சீனா ஒரு முன்னணி உலகளாவிய ஆயுத வழங்குநராக உள்ளது.  பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ்  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின் படி, சீன ட்ரோன் ஏற்றுமதியில் பாகிஸ்தான் உட்பட  18 நாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விங் லூங்ஸ் போன்ற சீன இராணுவ ட்ரோன்கள் மணிக்கு 370 கிலோமீற்றர் பறந்து சென்று தாக்குதல் நடத்த கூடியதுடன் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கூடியவையாகும்.

ஆர்மேனியா - அஷர்பைஜான் மோதலில் ட்ரோன் பயன்பாடு குறித்த ஆய்வறிக்கைகள் உள்ளன.  

சீனா ட்ரோன்களை உருவாக்குவது மாத்திரமன்றி அவற்றை எதிர்கொள்ளுவதற்கான முறைமைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளது. இவை அனைத்துமே சீன நலன்களை மையப்படுத்தியதாகவே உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17