சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வலியுறுத்தல்

Published By: Vishnu

14 Sep, 2021 | 07:28 AM
image

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, இயல்பான நோய்கள் உள்ள சிறுவர்கள், சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் சிறப்பு வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் வைத்தியசாலைகள் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் ஊடக கூறினார்.

பாடசாலைகளில் 90% க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு தற்போது வரை முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் சாரதிகளுக்கும் அவசியம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் அடுத்த வாரம் முதல் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கூற்றுக்களின்படி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு மூன்று கட்டங்கள் அடிப்படையாக கொவிட்-19 தடுப்பூசி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் நாள்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரண தரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

மூன்றாவது கட்டத்தில் மீதமுள்ள குறிப்பாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இதேவ‍ேளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயும் குழுவின் அறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி கொவிட் வைரசு தொற்று பரவலை தடுக்கும்  ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44