பல கேள்விகளுடன் விடியும் கூலித்தொழிலாளர்களின் பொழுது 

Published By: Gayathri

14 Sep, 2021 | 06:30 AM
image

“நான் உழைத்தால் மாத்திரமே எனது குடும்பத்தினர் ஒருவேளையாவது உணவருந்த முடியும். என்னை நம்பி வீட்டில் 6 ஜீவன்கள் உயிர் வாழ்கின்றனர்” என்கிறார் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள சந்தையில் கூலி வேலைசெய்யும் 40 வயதுடைய சந்திரன். 

கொரோனாவின் கோரத் தாண்டவம் இரண்டு வருடங்களாகியும் இன்னும் குறைந்த பாடிலில்லை. முதலாவது இரண்டாவது மூன்றாவது அலைகள் என வைரஸின் தாக்கம் இன்னும் டெல்டா வைரஸ் என வீரியம் அடைந்துகொண்டே செல்கின்றது. 

இதனால் நாடு முடக்கப்பட்டதால் சந்திரன் போன்ற பல கூலித்தொழிலாளிகளின் குடும்பங்கள் நடுத்தெருவில் பசிபட்டினியால் வாடுகின்றன. 

எனது வருமானத்தைத் விட செலவுகள் அதிகமாக இருக்கின்றது என ஏக்கத்துடன் தெரிவிக்கும் சந்திரன், என் குழந்தைக்கு மாத்திரம் ஒரு மாதத்திற்கு பால்மாவிற்கான செலவு 5500 ரூபா என்கிறார். 

நாடு முடக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பொரும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், இவ்வாறு கூலிவேலை செய்து அன்றாடம் உழைத்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மக்களின் நிலைதான் கேள்விக்குறியாகியுள்ளது. 

“நாடு முடக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களைப் போன்ற ஏழைகளைத் தவிர ஏனைய அனைவரும் வெளியில் நடமாடுகிறார்கள். மொத்த வியாபார நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வியாபரத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் எங்களுக்கு மட்டும் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை நாங்கள் வியாபாரம் செய்வதற்காக வைத்திருக்கின்ற பொருட்களை நகர சபையினரோ அல்லது பொலிஸாரோ கண்டால் அவை அனைத்தையும் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் ” என கூலி தொழிலாளியான சந்திரன் மன வேதனையுடன் தெரிவிக்கின்றார். 

நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு போடப்பட்டு வாராந்தம் அந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் வீதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு குறைவில்லை. மக்கள் அன்றாட வாழ்கையை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஆனாலும் பணம் படைத்தவர்கள் மற்றும் வசதியுடையவர்கள் மாத்திரம் பொருட்களை தேவைக்கதிகமாக கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது. 

இன்னும் சந்திரனுடன் இணைந்து தொழில்புரியும் சிலர் வியாபாரமும் இல்லாமல் கையில் பணமும் இல்லாமல் பட்டினியில் தவிப்பதாகவும் இரவு பகலாக புறக்கோட்டை சந்தையிலேயே படுத்துறங்குவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். 

அது மட்டுமல்லால் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருந்துகின்றனர். 

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தால் பணம் படைத்தவரை்களை விட ஏழை மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

ஏனெனில் அவர்கள் அன்றாடம் உழைத்து தமது வாழ்க்கையை கொண்டு நடத்துபர்கள் என்பதால் அவர்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல சுகாதார வாழிகாட்டல்களுடன் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இதேவேளை, தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நம் நாடு பொருளாதார ரீதியில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கமும் சீர்செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

ஆனால் எழை மக்கள் மற்றும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையில் மாத்திரம் எவ்வித மாற்றங்களும் இல்லாது அவர்களின் வாழ்க்கை உருண்டோடுகின்றது. 

இந்நிலையில், இவ்வாறான மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரபோவது யார்? இவர்களுக்கு நியாயம் கிடைக்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாது போனால் இவ்வாறானவர்களின் வாழ்கையில் பட்டினி குடிகொண்டு விடுமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41